market passion

Thursday, June 28, 2007

நலம் நலமறிய ஆவல்

வணக்கம் நண்பர்களே, எப்படி இருக்கீங்க? ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு.பிறந்த நாள் மற்றும் திருமண நாள் நல்லபடியா போச்சு.பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களுக்கு வாழ்த்து தெரிவித்த கீதா மேடம் மற்றும் நாகை(புலி)சிவாவிற்க்கும் நன்றி.
2 நாளைக்கு ஒரு தடவை உறவினர் மற்றும் நண்பர்களுடன் சாப்பாடு, பார்ட்டின்னு(என்ன பார்ட்டின்னு நீங்களே ஊகிக்கலாம்) எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருக்கேன்.ஒரு வருஷம் சௌதியில் இருந்த விரதத்தையெல்லம் உடைக்க வேண்டாமா?இன்னிக்கும் ஒரு cousins' gettogether.சௌதியில் 24 மணி நேரம் இன்டர்னெட் ப்ரீ.அதுனால நெனச்சப்பயெல்லாம் எழுதினேன்.இங்க அது முடியல்ல atleast இந்த 2 நாள்ள தலைவியின் கட்டளைபடி அந்த எட்ட போட்டு முடிக்கறேன் அண்ணன் தி.ரா.ச வுடன் போன்ல பேசினேன்.அடுத்த வாரம் நேரில் சந்திப்பதாக பிளான்.
ஆகா, போஸ்ட் போடும்போதுதான் பாக்கறேன்.இது 26வது போஸ்ட்டுன்னு.2+6= 8. நா 8 போட்டுட்டேன்ன்ன்

மீண்டும் வருகிறேன்.

Labels:

Wednesday, June 20, 2007

நானும் நாலும்

கீதா மேடம் 300வது பதிவு போடறத்துக்குள்ள நான் என்னோட 25வது பதிவ போட்டுடு ஊருக்கு கிளம்பலாம்னு தோணிச்சு.அதான் ஒரு சின்ன மொக்கை. எனக்கும் நம்பர் 4க்கும் உள்ள தொடர்பை சொல்லலாமேன்னு தோணிச்சு.

பிறந்த தேதி 22 -ஜூன் - 1958 (2+2=4)

கூட பிறந்தவர்கள் - 4பேர்(2 அண்ணா 1 அக்கா 1 தம்பி)

ஆதலால் 5 குழந்தைகளில் நான் 4வது

என் மனைவியும் அவள் பெற்றோர்களுக்கு 4 வது கோந்தே!

2 அண்ணன்கள் 1 அக்காவுடன் அவர்கள் வீட்டிலும் 4 பேர்

காலேஜ் 4 வருஷம் - P.U.C - 1 வருஷம்( ஆமாங்க நாங்கயெல்லாம் கற்காலம் - கல்வியை ஒழுங்காக கற்று கொண்ட காலம் - தான்) B.COM -3 வருஷம்

4 எழுத்து படிச்சவன் - B.COM , C.A

CA படிச்சது மொத்தம் 4 வருஷம்

Exams 4 தடவை எழுதினேன் - Inter 2 தடவை , Final 2 தடவை

4லும் தெரிஞ்ஜவன்னு 4 பேரு சொல்லனும்ம்னு ஆசை

என் மனைவிதான் நான் பார்த்த 4வது பெண் - அவளுக்கும் இது தெரியுங்கோ அதுனால எந்த பரட்டையும் பத்த வைக்க முடியாதுங்கோ?????????

4 வது படிக்கும் போது 100% attendence வாங்கி பள்ளிக்கு தவறாமல் வந்தவர்னு ஒரு புத்தகம் பரிசு வாங்கினேன்

அதே 4 வது படிக்கும்போது வகுப்பு தலைவன் என்ற பொறுப்புல(ஆணவத்துல) லேட்ட வந்த 1 பைய்யன வகுப்பு ஆசிரியர்ட்ட போட்டு குடுத்து அதுக்காக அவன் என் முதுகுல ஏதோ ஒரு செடியோட இலையை தடவ 4 நாள் நார்மலா படுக்க முடியல்லீங்க

சொந்தமா ஆபீஸ் நடத்தின(லக்ஷணம்)து போதும்னு நினைச்சு வேலைக்கு போக ஆரமிச்சு இது 4ஆவது வருஷம்

சௌதி அரேபியா வந்து ஆபீஸ்ல சேர்ந்தப்பறம்தான் பாக்கறேன் ஆபீஸும் வீடும் இருக்கற தெரு 4th street.

சௌதில பொழுது போகாம சொந்த ஊரான சிதம்பரத்த பத்தி ஏதோ நெட்டுல தேட போக அப்ப கீதா மேடம் வலைல சிதம்பர ரகசியம் மற்றும் கோயில் பத்தி படிக்க போயி இப்ப activeஆ இருக்கற BLOG - 4 எழுத்துதான்


சரி சரி மொக்கை போட்டது போதும்னு நீங்க நினைக்கறத்துக்குள்ள நா எஸ்கேப் - அட ஊருக்கு போய் இறங்கற அன்னிக்கும் தேதி 22ங்க(2+2 =4) அதாங்க பிறந்த நாள் அன்னிக்கி - அதுவும் 49வது பிறந்த நாள் - ஓஓஓஓஓஓஓ - 4+9 = 13 =4 உடம்பெல்லாம் புல்லரிக்குதுடா சாமி!!!!!!!!!!!!!!!!


டாட்டா,பைபை

Labels:

Saturday, June 16, 2007

A JOKE FOR THE DAY

வித்தியாசமாக ஒரு பெட்(PET) வைத்துக்கொள்ள விரும்பிய ஒரு இளைஞன் ஒரு பெட் ஷாப்புக்கு போனான். வெகு நேரம் சுற்றிவிட்டு ஒரு மரவட்டையை(CENTIPEDE) பார்த்தான். கடைக்காரரிடம் இதன் ஸ்பெஷல் என்ன என்று கேட்க அவர் அது பேசும் மரவட்டை என்று சொன்னார். ஆச்சர்யமாய் பார்த்த அவன் அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து அழகாக ஒரு பெட்டியில் வைத்தான். முதல் நாள் எதுவும் பேசவில்லை. இரண்டாவது நாள் சர்ச்சுக்கு கிளம்பும்போது அதை பார்த்து "சர்ச்சுக்கு போய் ப்ரார்த்தனை செய்துவிட்டு வரலாமா" என்று கேட்டான். மரவட்டை எந்த பதிலும் கூறவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டான். அப்பொழுதும் பதில் இல்லை. பொறுமையிழந்த அவன் மரவட்டை இருந்த பெட்டியின் மூடியை திறந்து சத்தமாக மூன்றாவது முறை கேட்டான். அப்பொழுது அந்த மரவட்டை சொல்லியது " நீ முதல் தடவை கேட்டபோதே காதில் விழுந்தது. அதான் ஷூ போட்டு கொண்டிருக்கிறேன், வெயிட் பண்ணு வரேன்"

Labels:

Friday, June 15, 2007

எஸ்.பி.பி எம்ஜிஆருக்கு பாடியது எப்படி

பாடல் வரிகள் எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்டன.ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடத்த அனுமதியும் பெற்றாகிவிட்டது. இந்த நேரத்தில்தான் எஸ்.பி.பி சற்றும் எதிர்பாராமல் நோய்வாய்பட்டு ரிகர்சலின் போது சரியாக பாட முடியவில்லை.மனம் நொந்தபடி வீட்டுக்கு சென்ற எஸ்.பி.பின் உடல் நிலை மேலும் மோசமாகியது.அடுத்த நாள் ரெகார்டிங் போக வந்த கார் ட்ரைவரிடம் தன்னால் பாட இயலாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார் எஸ்.பி.பி. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் போனது. தன் விதியை எண்ணி நொந்த எஸ்.பி.பி இன்னேரம் டி.எம்.யெஸ் பாடி ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டு இருக்கும் என்று எண்ணினார். அப்போது அவரது ஒரே நம்பிக்கை மீண்டும் ஒரு முறை எம்.ஜி.ஆர் கூப்பிடுவார் என்பதுதான்.

திடீரென்று ஒரு நாள் மீண்டும் எம்.ஜி.ஆர் கம்பெனி கார் எஸ்.பி.பி வீட்டுக்கு வந்தது. வந்த ப்ரொடக்க்ஷன் அஸிஸ்டென்ட் கேட்டார் - நீங்கள் உடல் நலம் தேறி விட்டீர்களா? ஆயிரம் நிலவே வா பாட்டு பாட வரமுடியுமா? என்று கேட்டார்.இன்னும் உடல் முழுதாக தேறவில்லையெனினும் இந்த முறை வாய்ப்பை அவர் விடுவதாக இல்லை. சரி வருகிறேன் என்று சொல்லி தன் தந்தையுடன் காரில் ஏறினார். அவர் ஆச்சர்ரியத்தை புரிந்து கொண்டு வந்தவர் சொன்னார் - அந்த பாடல் இன்னும் ஷூட்டிங் செய்யப்படவில்லை ஏனென்றால் பாடலை எஸ்.பி.பிதான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்லி விட்டார் என்று.
ஒரு பக்கம் அளவு கடந்த சந்தோஷம். ஒரு பக்கம் உடல் சோர்வு. 11 டேக்குகளுக்கு பிறகு கே.வி.மகாதேவன் பாடலை ஒகே செய்தார். பாடலைப்பாடிய உற்சாகத்துடனும் உடல் சோர்வுடனும் இருந்த எஸ்.பி.பி தைரியத்தை வரவழித்து கொண்டு எம்.ஜி.ஆரை கேட்டார் ஏன் இவ்வுளவு நாள் பொறுத்திருந்தீர்கள் என்று. அதற்கு எம்.ஜி.ஆர் சொன்னாராம் - தம்பி முதல் முதலாக நீ தமிழில் பாடுகிறாய். அதுவும் எம்.ஜி.ஆருக்கு பாடுகிறேன் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லியிருப்பாய். மேலும் முதல் பாடலிலேயே உன்னை மாற்றினால் உன் எதிர்காலமே பாதிக்கப்படும் நீ சரியாக பாடவில்லை அதனால்தன் எம்.ஜி.ஆர் மாற்றிவிட்டார் என்று ஒரு பேச்சு நிலவும் அதனால்தான் நான் காத்திருந்தேன் என்று. நன்றி சொல்ல முடியாமல் நா தழுதழுக்க கண்கள் குளமடைய திகைத்து நின்ற எஸ்.பி.பிக்கு கை குடுத்து வாழ்த்திவிட்டு போனார் எம்.ஜி.ஆர். இதனால் இன்றும் எம்.ஜி.ஆரின் உதவி செய்யும் குணத்தை எஸ்.பி.பி மறக்காமல் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் பாடிய முதல் தமிழ் பாடல் "ஆயிரம் நிலவே வா" வாக இருந்தாலும் அவர் பாடி முதலில் வெளி வந்த படம் "பால்குடம்" பாடல் "மல்லிகை பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக" இந்த படம் 14-01-1969 அன்று பொங்கல் ரிலீஸ்ஸாக வெளியானது. இசை அமைப்பாளர் எம்.ஸ்.வீ அவர்கள்.
இரெண்டாவது படம் 'குழந்தை உள்ளம்" பாடல் "முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" இசை அமைப்பாளர் - எஸ்.பி.பியை தெலுங்கில் அறிமுகப்படுத்திய திரு.கோதண்டபாணி அவர்கள்.
மூன்றாவது படம்தான் அடிமைப்பெண் இது 01-05- 1969 ரிலீஸ்ஸானது. நான்காவது பாடல் 'இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி' - படம் சாந்தி நிலையம்.
ஐந்தாவது பாடல் "பவுர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் கடற்கரை மணலில் குளிப்போமா" படம் கன்னிப்பெண்.
இந்த 5 பாடல்கள்தான் தமிழ் சினிமாவில் எஸ்.பி.பின் முதல் வருட பாடல்கள்.
அந்த வருடத்தின் சிறந்த பிண்ணணி பாடகராக தமிழக அரசால் தேர்தெடுக்கப்பட்டதும் அதன் பிறகு தமிழ் சினிமா பாடல்கள் புத்துணர்ச்சி பெற்றதும் நாம் எல்லொரும் அறிந்ததே.

Labels: ,

Thursday, June 14, 2007

SPB எம்ஜிஆருக்கு பாடியது எப்படி -

"அடிமைப்பெண்" - எம்ஜிஆர் பெரும் எதிர்ப்பார்ப்புடன் 1966இல் ஆரம்பித்த படம். மிகப்பெரிய செலவில் ராஜஸ்தான் அரண்மனைகளில் எடுக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிக நடிகையர் - சரோஜாதேவி,கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ரத்னா நம்பியார் மற்றும் பலர். சூட்டிங் ஆரம்பித்து பத்திரிகைகளில் பெரும் பரபரப்புடன் சில படங்களும் வெளி வரத்துவங்கின. அப்பொதுதான் ஒன்றன்பின் ஒன்றாக சில நிகழ்ச்சிகள் நடந்தன.

ஒரு நாள் சூட்டிங் பொழுது நடிகை ரத்னா குதிரையில் இருந்து கீழே விழுந்து படுகாயமுற்றார்.இந்த சம்பவத்தால் மனம் சோர்வுடன் சூட்டிஙை சில நாட்கள் தள்ளி வைத்தார் எம்ஜிஆர்

அப்பொழுது தமிழ் நாடு எலெக்க்ஷன் அறிவிக்கப்பட்டு
எம்ஜிஆர் பறங்கி மலையில் இருந்து போடியிடுவதாக முடிவு செய்யப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது

அப்பொழுதுதான் எம்ஜிஆர் வாழ்வில் மீண்டும் ஒரு எதிர்பாராத சம்பவம். 12th January 1967 அன்று எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டார். கழுத்தில் புல்லட் குண்டுடன் உயிர் தப்பினார் எம்ஜிஆர். சென்னை ராயபேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே சரோஜாதேவிக்கு திருமணம் ஆயிற்று. இந்த சம்பவங்களினால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

1968இல் மீண்டும் அடிமைப்பெண் ஆரம்பிக்கபட்டபோது பல மாற்றங்கள்.முதலில் எம்ஜிஆரே டைரக்ட் செய்வதாக இருந்தது இப்பொது கே.ஷங்கர்(இது பழய ஷங்கருங்கோ) ஜெயலலிதா இரட்டை வேடங்களில் கதா நாயகியாக(ஜீவா & பவளவல்லி) நடிக்க எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிக்க அடிமைப்பெண் 1st may 1969இல் வெளியானது.

இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் அருமையாக 6 பாடல்கள் தந்தார். அதில் ஒன்றுதான் ஆயிரம் நிலவே வா. எஸ்.பி.பி 1966இல் தெலுங்கு படத்தில் பாட ஆரம்பித்தார். அந்த பட இசை அமைப்பாளர் கோதண்டபாணி அவர்கள் எஸ்.பி.பின் குரலால் ஈர்க்கப்பட்டு தானே அவரை பல இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தார்.

ஒரு நாள் ஒரு ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் தியெட்டரில் எஸ்.பி.பி ஒரு தெலுங்கு படத்திற்க்காக பாடிக்கொண்டிருந்தார். அது குடியிருந்த கோயில் படத்தின் தெலுங்கு டப்பிங்.அப்பொழுது அந்த ஸ்டூடியோ வந்த எம்.ஜி.ஆரை அந்த குரல் வசப்படுத்த தன் உதவியாளரை அனுப்பி பாடுபவர் யார் என்று விசாரித்தாராம்.பின்னர் கே.வி.மகாதேவனிடமும் சொல்லி இந்த படத்தில் அந்த பையனுக்கு 1 பாடல் கொடுங்கள் என்றார்.

இந்த விஷயம் எஸ்.பி.பிக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.தமிழ் சினிமாவில் முதல் பாட்டு - அதுவும் எம்.ஜி.ஆருக்கு அதுவும் சுசீலாவோடு.எந்த புது பாடகனுக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. அப்பொழுதுதான் விதி அவர் வாழ்க்கையில் சிறிது விளையாடியது

என்ன ஆச்சு? அவர்தான் பாடினாரே என்று கேக்காதீங்க? ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க?சௌதியிலே நாளைக்கு ஆபீஸ் லீவுதான். நாளைக்கு சொல்லறேன்

எதுக்கு இதெல்லாம் சொல்லறேன்னா நண்பர் கார்த்திகேயன் சொன்னது மாதிரி நேற்று இன்று நாளை படத்திற்க்கு முன்பே எஸ்.பி.பி இரண்டு அல்ல பல பாடல்களை பாடியுள்ளார்

Labels:

Wednesday, June 13, 2007

கவிதை எண் 5

எவ்வளவோ பேர் உன் காதலுக்காக ஏங்க
என்னை மட்டும் காதலித்த நீ ஒரு தியாகிதான்

அப்பா அம்மா அண்ணன் தம்பி என்று
ஓர் உலகமே உனக்கு இருந்தும்
என்னையே உலகம் என்று எண்ணி வந்த நீ
ஒரு தியாகிதான்

அப்படிப்பட்ட தியாகிக்கு என்ன விருது கொடுப்பது
என்னைவிட சிறந்ததாக எதை விருதாய் கொடுப்பது

மீண்டும் இப்படி ஒரு விருது(விருந்து)
இந்த வாழ் நாளில் கிடைக்காது

ஆதலால் அதை நன்கு பேணி காத்திடு
தினம் தினம் பார்த்து மகிழ்ந்திடு

Labels: ,

இன்னிக்கு சாப்பிட போனபோது டிவியை ஆன் பண்ணிட்டு BBCயை போட்டேன். அதில் சூடானில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்கள் பற்றி ஒரு கண்ணோட்டம். நம்ப புதிய நண்பர் நாகை சிவா சூடானில் இருப்பதால் தொடர்த்து பார்த்தேன். மனசை ரொம்பவே பாதிச்சுருச்சு வெறும் பேச்சில் மட்டும் இல்லாமல் 3 மாததிற்குள் தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது. கரெக்ட்டா என்ன பிரச்னைன்னு தெரியல்லை.பிரச்சனைக்கு காரணமே அரசுதான்னும் சொல்றாங்க. சிவா, அத பத்தி ஒரு POST போடுங்க

Labels: ,

Tuesday, June 12, 2007

வணக்கம் SPB சார்,
61வது பிறந்த நாளை அமர்க்களமா கொண்டாடும் உங்களால எனக்கு ஏற்படும் தினசரி பிரச்சனைகளை நீங்களே கேளுங்கள்

1. M.S amma இல் ஆரம்பித்து கானா உலகனாதன் வரை எவ்வளவோ பேர் பாடல்களை கேட்டாலும் உங்கள் குரல் மட்டும் என்னை பைத்தியம் பிடிக்க வைத்தது ஏன்?

2. காலேஜ் கடைசி நாளில் "கம்பன் ஏமாந்தன்" பாடலை நான் என்னால் முடிந்த வரை நன்றாக பாட எற்கனவே அந்த பாடல் வரிகளினால் கோபம் அடைந்த சக மாணவி பவானி பெரிய SPB ன்னு நினைப்பு என்று திட்டிய அளவுக்கு நீங்கள் ஏன் அழகாக பாடினீர்கள்?

3. திரைப்பட பிண்ணனி இசையை பற்றி ஓரளவு தெரிந்த வேளையில் தாங்கள்தான் ரஜினி மாதிரியும் கமல் மாதிரியும் பாடுகிறீர்கள் என்று நான்
சொல்ல, இல்லை என்று Bet வைத்து அதில் தோற்றுப்போன ஒரு நண்பன் எதிரி ஆனது உங்களால்தானே?

4. காதல் பாடல்களில் எல்லா விதமான உணர்ச்சிகளையும் காட்டி இளம் பெண்களின் மனதில் இடம் பிடித்து என் போன்ற இளைஙர்களுக்கு காதலிகள் கிடைக்காமல் செய்தீரே, இது நியாயமா?

5. சரி காதலிதான் கிடைக்கவில்லை மனைவியை காதலிக்கலாம் என்று முடிவு செய்து "நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்" என்று வாழ்கைல செட்டில் ஆரத்துக்குள்ள "சம்சாரம் அது மின்சாரம்" என்ற உண்மையை என் அப்பாவி மனைவிக்கு தெரிய வைச்சு என் வாழ்கையில் ஷாக் அடிக்க வச்சது ஏன்?

இப்படி பல்வேறு கட்டங்களில் என் வாழ்வில் புகுந்து விளையாடிய/விளையாடிக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு என் மனதில் ஆயுள் தன்டணை விதித்து தீர்ப்பளிக்கின்றேன்

Recording க்கு மட்டும் அவ்வபொழுது Parole லில் சென்று வரலாம்

Labels:

Sunday, June 10, 2007

Happy Investing

After losing steadily for the past 3 months, the U.S dollar recovered on friday against all major currencies. Being an Indian, let me give my view with reference to the Indian Rupee Vs U.S.Dollar. The INR gained from a steady 44 range to reach 40.25 a week back in the last 3 months but has lost since then to close around 41 on saturday. While we may have a confirmation of this pullback next week, the technical indicators are suggesting a rally upto 42 - 42.50 in the next month or so. That should be a relief to all NRIs always wanting an attractive conversion rate(especially during the week when we get our salary)
Regarding stock market, it has been a volatile week with Chinese market doing most of the demage. I had mentioned in my last post on this saying the Chinese Stock exchange Authorities are not comfortable to see too much money flowing into the already overheated stock market.
They announced some drastic taxation measures on stock market gains which lead to the 2nd biggest fall in 1 day(8.8%) Most of the world markets followed suit but for a mild recovery by the U.S.market on friday.
As for as Indian market is concerned, while the long term bull trend is still in tact, caution, risk awarness and stock picking are the buzzwords.
For specific stock related queries you may write to my mail id directly.

Labels: ,

Wednesday, June 06, 2007

எவ்வளவோ முறை கேட்ட "சபாபதிக்கு" பாடலில் உள்ள பலருக்குத் தெரியாத ஒரு உண்மையை சொன்ன அண்ணன் தி.ரா.ச அவர்களுக்கு நன்றி. இதே போல தமிழ் திரை இசையில் நடந்த அல்லது நடவாது போன சில மாற்றங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

முதலில் மாறின ஒரு பாடல்

1943 இல் ஆல் டயம் சூப்பர் ஸ்டார் MKT நடித்த சிவகவி படம் வெளிவந்தது. அதில் அருமையாக 6 பாடல்கள். அவற்றில் ஒன்று "வதனமே சந்திர பிம்பமோ" . பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யும் முன்பு எழுதப்பட்ட வார்த்தை "முகமது சந்திர பிம்பமோ". அப்பொழுதுதான் யாரொ ஒருவர் தயாரிப்பாளரிடமும் பாடலாசிரியரிடமும் சொன்னாராம் - முகமது என்றால் இஸ்லாமியர்களை குறிக்கும் என்று. பிறகுதான் அந்த வார்த்தையை வதனமே என்று மாற்றினார்கள்.

இப்பொழுது மாறாத ஒரு பாடல்

அடுத்த சூப்பர் ஸ்டார் MGR நடித்த பெரிய இடத்துப்பெண் -
பாடல் "கட்டோடு குழலாட ஆட ஆட, கண்ணென்ற மீனாட ஆட ஆட" இரன்டு இளம் குமரிகளை வர்ணித்து பாடும் அந்த பாட்டில் ஒரு வரி வரும் " "பச்சரிசி பல் ஆட" என்று. பாடல் எழுதியவர் கண்ணதாசன். படம் வெளி வந்த பிறகே யாரோ கண்ணதாசனிடம் சொன்னார்களாம் - கிழவிக்கு தானே பல் ஆடும், குமரிகளை பார்த்து பாடும் போது எப்படி அப்படி பாட முடியும் என்று. தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டராம் கண்ணதாசன் அவர்கள்.

மூன்று நான்கு நிமிடம் வரும் பாடலுக்குப்பின் எவ்வளவு விஷயம் இருக்கு பாருங்க

அப்பாடா இன்னிக்கு ஒரு போஸ்டு போட்டாச்சு - இனிமே துப்பரதும் துப்பாததும் உங்க இஷ்டம்

Labels:

Tuesday, June 05, 2007

கவிதை எண்:4

கடமையை செய் பலனை எதிர்பாராதே

என்கிறது கீதை

காதலை செய் கல்யாணத்தை எதிர்பாராதே

என்கிறாள் பக்கத்து வீட்டு கீதா

Labels:

Monday, June 04, 2007

பாடும் நிலா பாலு அவர்களே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அந்த நிலாவையும் இமயத்தின் சிகரத்தயும் கூட
தொட்டுவிட்டான் மனிதன்
ஆனால் நீங்கள் தொட்ட சிகரங்களை
யாரேனும் தொட முடியுமா

4 ஆல்பம் வருவதற்க்குள் பேட்டி கொடுக்க
கிளம்பும் நண்பர்களுக்குதாங்கள்
40000 பாடல்கள் பாடியது
தெரியுமோ தெரியாதோ

தாங்கள் வாழும் காலத்தில் நானும்
வாழுவது என் அதிஷ்டம்
என் தாய் பிறந்த அதே நாளில்
நீங்கள்பிறந்தது உங்கள் அதிஷ்டம்

என்றும் நிலைத்திருக்கும்
தங்கள் பாடல்களோடு
தாங்களும் நிலைத்திருக்க
இறைவனைப் பிரார்திக்கிறேன்

Labels:

Sunday, June 03, 2007

மறந்தால்தானே நினைப்பதற்க்கு என்று
பொய் சொல்ல மாட்டேன் நான்

ஏன் நீ கோபப்படுகிறாய் உன்னை நான்
எப்பொழுதும் நினைக்கவில்லை என்று

உனக்கு தெரியுமா நான்
அதனால்தான் உயிர் வாழ்கிறேன் என்று

ஏனென்றால் உன்னை நினைக்கும் போது
நான் சுவாசிக்க மறந்து போகிறேன்...............

விருதுகள் எனக்கு தேவையில்லை
உஙகள் விமர்சனங்களை அள்ளி வீசுங்கள்

Labels:

Saturday, June 02, 2007

இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்(ஜுன் 2)

தமிழ் திரை இசையை உலகிற்க்கு எடுத்து சென்றவரே
கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளங்களில் வாடகை கொடுக்காமல்
அவர்கள் அனுமதியுடன் வருடக்கணக்காக குடியிருக்கும் குத்தகைக்காரரே
30 வருடங்களில் எத்தனை படங்கள் எத்தனை பாட்டுக்கள் எத்தனை விருதுகள்
வந்த சுவடு தெரியாமல் மறையும் பலர் மத்தியில்
மறையாத சுவடு பதித்த நீர் பல்லாண்ண்டு வாழ்க

Labels:

அப்பாடா ஒரு வழியாக லீவு கன்ப்ர்ம் ஆகி டிக்கெட்டும் புக் ஆயிடுச்சி. ஒரு மாத லீவுல சென்னை போறேன். நியுஸ் வந்ததிலிருந்து ஒரே குஷி.கான்ட்ராக்டு 30 ஜுன் முடிஜ்ஞாலும், கல்யாண நாள் 27 ஜுன் வருவதால் ஒரு பிட்டு போட்டு வச்சிருன்தேன். சரி தொலஞ்ஜு போரான்னு குடுத்துடாங்க. எப்படி குடுத்தா என்ன நமக்கு வேணுங்கறது கிடச்சாச்சு. இனிமே என்ன பர்சேச்ஸெஸ்தான் பாக்கிங்தான். யார் யாருக்கு என்ன வாங்கனும் ஒரு லிஸ்டு போடனும். 1 மாசதுல்ல என்னெல்லாம் பண்ணனும்,யார் யார பாக்கணும் - நண்பர்கள் - உறவினர்கள் - சொந்த ஊரான சிதம்பரம் - குலதெய்வம் வைதீஸ்வரன் கோயில் - அப்படியெ அண்ணாமலை யுனிவெர்சிடி காம்பசை ஒரு சுற்று சுற்றிட்டு வரணும்(4 வருஷம் குப்பை கொட்டின இடம் ஆச்சே) - 2/3 நாள் வைப்போட யெஸ்கேப் - பழய ஆபீசோட PF பேப்பர்ஸ சப்மிட் பன்னனும் - செலவ ஈடு கட்ட வேண்டாமா?
சிங்கார சென்னையிலே இந்த ஒரு வருஷதில் எவ்வளவு மாற்றங்களோ. பொற்கொடிக்கு பிடித்த பெஸன்ட் அவின்யு, எனக்கு பிடித்த வரசித்தி வினாயகர் கோயில் எல்லொருக்கும் பிடித்த பெஸன்ட் நகர் பீச் அடையார் ஆனந்த பவன் எல்லாத்தயும் பாத்து ஒரு வருஷம் ஆச்சு இதுக்கெல்லம் எப்புடி ஒரு மாசம் போதும் அடுத்த வருஷ லீவையும் சேத்து குடுத்தா நல்லாருக்கும்.தொழிலாளி கஷ்டம் எந்த முதலாளிக்கு புரியுது?சரி சரி பொலம்பறத விட்டுட்டு பொழப்ப பாப்போம்.

கவுண்டவுன் ஸ்டார்ட்ட்ஸ் - 19 டு கோ - டு காட்ச் தி ப்ளைட்

Labels:

Friday, June 01, 2007

இன்றைய கவிதை

உன் காதலை சுமக்கும் எனக்கு உன்னை சுமப்பது ஒன்றும் கடினமில்லை.ஆனால் உன்னை சுமந்த பின் ஏன் மயிலிறகும் சுமையாக தெரிகிறது.

எண்ணமும் எழுத்தும்
சௌதி சாம்பு

Labels:

3 நாள் கடும் உழைப்புக்கு அப்புறம் தமிழில் எழுத கண்டு பிடித்து விட்டென். நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே. முதலில் சில குறைகள் இருந்தாலும் மன்னித்து ஏற்று க் கொள்ளுங்கள்.ஒரு தமிழ் கவிதையில் ஆரம்பிக்கிறேன்

வாழும் பொழுது நான் உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைபதாலேயெ வாழ்ன்து கொண்டு இருக்கிறேன்