SPB எம்ஜிஆருக்கு பாடியது எப்படி -
"அடிமைப்பெண்" - எம்ஜிஆர் பெரும் எதிர்ப்பார்ப்புடன் 1966இல் ஆரம்பித்த படம். மிகப்பெரிய செலவில் ராஜஸ்தான் அரண்மனைகளில் எடுக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிக நடிகையர் - சரோஜாதேவி,கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ரத்னா நம்பியார் மற்றும் பலர். சூட்டிங் ஆரம்பித்து பத்திரிகைகளில் பெரும் பரபரப்புடன் சில படங்களும் வெளி வரத்துவங்கின. அப்பொதுதான் ஒன்றன்பின் ஒன்றாக சில நிகழ்ச்சிகள் நடந்தன.
ஒரு நாள் சூட்டிங் பொழுது நடிகை ரத்னா குதிரையில் இருந்து கீழே விழுந்து படுகாயமுற்றார்.இந்த சம்பவத்தால் மனம் சோர்வுடன் சூட்டிஙை சில நாட்கள் தள்ளி வைத்தார் எம்ஜிஆர்
அப்பொழுது தமிழ் நாடு எலெக்க்ஷன் அறிவிக்கப்பட்டு
எம்ஜிஆர் பறங்கி மலையில் இருந்து போடியிடுவதாக முடிவு செய்யப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது
அப்பொழுதுதான் எம்ஜிஆர் வாழ்வில் மீண்டும் ஒரு எதிர்பாராத சம்பவம். 12th January 1967 அன்று எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டார். கழுத்தில் புல்லட் குண்டுடன் உயிர் தப்பினார் எம்ஜிஆர். சென்னை ராயபேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே சரோஜாதேவிக்கு திருமணம் ஆயிற்று. இந்த சம்பவங்களினால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
1968இல் மீண்டும் அடிமைப்பெண் ஆரம்பிக்கபட்டபோது பல மாற்றங்கள்.முதலில் எம்ஜிஆரே டைரக்ட் செய்வதாக இருந்தது இப்பொது கே.ஷங்கர்(இது பழய ஷங்கருங்கோ) ஜெயலலிதா இரட்டை வேடங்களில் கதா நாயகியாக(ஜீவா & பவளவல்லி) நடிக்க எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிக்க அடிமைப்பெண் 1st may 1969இல் வெளியானது.
இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் அருமையாக 6 பாடல்கள் தந்தார். அதில் ஒன்றுதான் ஆயிரம் நிலவே வா. எஸ்.பி.பி 1966இல் தெலுங்கு படத்தில் பாட ஆரம்பித்தார். அந்த பட இசை அமைப்பாளர் கோதண்டபாணி அவர்கள் எஸ்.பி.பின் குரலால் ஈர்க்கப்பட்டு தானே அவரை பல இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தார்.
ஒரு நாள் ஒரு ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் தியெட்டரில் எஸ்.பி.பி ஒரு தெலுங்கு படத்திற்க்காக பாடிக்கொண்டிருந்தார். அது குடியிருந்த கோயில் படத்தின் தெலுங்கு டப்பிங்.அப்பொழுது அந்த ஸ்டூடியோ வந்த எம்.ஜி.ஆரை அந்த குரல் வசப்படுத்த தன் உதவியாளரை அனுப்பி பாடுபவர் யார் என்று விசாரித்தாராம்.பின்னர் கே.வி.மகாதேவனிடமும் சொல்லி இந்த படத்தில் அந்த பையனுக்கு 1 பாடல் கொடுங்கள் என்றார்.
இந்த விஷயம் எஸ்.பி.பிக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.தமிழ் சினிமாவில் முதல் பாட்டு - அதுவும் எம்.ஜி.ஆருக்கு அதுவும் சுசீலாவோடு.எந்த புது பாடகனுக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. அப்பொழுதுதான் விதி அவர் வாழ்க்கையில் சிறிது விளையாடியது
என்ன ஆச்சு? அவர்தான் பாடினாரே என்று கேக்காதீங்க? ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க?சௌதியிலே நாளைக்கு ஆபீஸ் லீவுதான். நாளைக்கு சொல்லறேன்
எதுக்கு இதெல்லாம் சொல்லறேன்னா நண்பர் கார்த்திகேயன் சொன்னது மாதிரி நேற்று இன்று நாளை படத்திற்க்கு முன்பே எஸ்.பி.பி இரண்டு அல்ல பல பாடல்களை பாடியுள்ளார்

Labels: SPB and MGR
3 Comments:
At 12:05 PM, Geetha Sambasivam said…
இன்னும் கமென்ட் மாடரேஷன் பண்ணலையா? இன்னிக்கு நான் தான் முதலிலா? உங்க கட்டுரை, கவிதையை விட நல்லா இருக்கு! :D கட்டுரையே முயற்சி செய்யுங்களேன். :))))))))))
At 11:04 PM, manipayal said…
அது என்னவோ தெரியில்லீங்க தமிழ் சினிமா இசையை பற்றி எழுதும்போது ஒரு எக்ஸ்ட்ரா ஆர்வம். அதுவும் ஜி.ராமனாதன் - சிவாஜி கணேசன் - டி.எம்.சௌந்தர்ராஜன் சேர்ந்த ஒரு காம்பினேசன் இருக்கே அதுக்கு எவ்வுளவு இளையராஜா வந்தாலும் ஈடாகாதுங்க
At 11:04 AM, நானானி said…
மணி! நீங்க சொன்ன காம்பினேஷன்
எனக்கு ரொம்பரொம்பப்பிடிக்கும்!
Post a Comment
<< Home