எவ்வளவோ முறை கேட்ட "சபாபதிக்கு" பாடலில் உள்ள பலருக்குத் தெரியாத ஒரு உண்மையை சொன்ன அண்ணன் தி.ரா.ச அவர்களுக்கு நன்றி. இதே போல தமிழ் திரை இசையில் நடந்த அல்லது நடவாது போன சில மாற்றங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
முதலில் மாறின ஒரு பாடல்
1943 இல் ஆல் டயம் சூப்பர் ஸ்டார் MKT நடித்த சிவகவி படம் வெளிவந்தது. அதில் அருமையாக 6 பாடல்கள். அவற்றில் ஒன்று "வதனமே சந்திர பிம்பமோ" . பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யும் முன்பு எழுதப்பட்ட வார்த்தை "முகமது சந்திர பிம்பமோ". அப்பொழுதுதான் யாரொ ஒருவர் தயாரிப்பாளரிடமும் பாடலாசிரியரிடமும் சொன்னாராம் - முகமது என்றால் இஸ்லாமியர்களை குறிக்கும் என்று. பிறகுதான் அந்த வார்த்தையை வதனமே என்று மாற்றினார்கள்.
இப்பொழுது மாறாத ஒரு பாடல்
அடுத்த சூப்பர் ஸ்டார் MGR நடித்த பெரிய இடத்துப்பெண் -
பாடல் "கட்டோடு குழலாட ஆட ஆட, கண்ணென்ற மீனாட ஆட ஆட" இரன்டு இளம் குமரிகளை வர்ணித்து பாடும் அந்த பாட்டில் ஒரு வரி வரும் " "பச்சரிசி பல் ஆட" என்று. பாடல் எழுதியவர் கண்ணதாசன். படம் வெளி வந்த பிறகே யாரோ கண்ணதாசனிடம் சொன்னார்களாம் - கிழவிக்கு தானே பல் ஆடும், குமரிகளை பார்த்து பாடும் போது எப்படி அப்படி பாட முடியும் என்று. தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டராம் கண்ணதாசன் அவர்கள்.
மூன்று நான்கு நிமிடம் வரும் பாடலுக்குப்பின் எவ்வளவு விஷயம் இருக்கு பாருங்க
அப்பாடா இன்னிக்கு ஒரு போஸ்டு போட்டாச்சு - இனிமே துப்பரதும் துப்பாததும் உங்க இஷ்டம்

Labels: வார்த்தையும் அர்த்தமும்
6 Comments:
At 3:19 AM, நாகை சிவா said…
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பின்னும் ஒரு கதை இருக்கும் போல
At 4:16 AM, Geetha Sambasivam said…
இது என்ன அதிசயம் மணிப்பயல்? புலி எப்படி உங்களைக் கண்டுபிடிச்சு தினமும் தவறாமல் வந்து (நறநறநறநற, இது புலிக்கு) உறுமிட்டு இருக்கு? நல்லாவே தமிழ் எழுத ஆரம்பிச்சாச்சு போல் இருக்கு, வாழ்த்துக்கள். நம்ம வீட்டுக்கும் வாங்க. ஹிஹிஹி, வலை வீட்டைச் சொன்னேன். நான் இந்தியா வந்ததும் சொல்றேன். மறுமுறை நீங்க இந்தியா வரும்போது நம்ம வீட்டுப் பக்கமும் வந்துட்டுப் போகலாம். சிதம்பரத்தில் நீங்க எந்தத் தெரு?
At 4:28 AM, Geetha Sambasivam said…
சொந்தக் கணினி என்றாலோ அல்லது நீங்க வீட்டிலேயே ப்ளாக் எழுதினாலோ இ-கலப்பையை விடச் சிறந்தது இல்லை என்பதுதான் என் கருத்தும் கூட. ஆனால் வெளியே இருந்து அலுவலகக் கணினி மூலமோ அல்லது பிறர் வீட்டிலோ இருந்தால் இ-கலப்பையை இன்ஸ்டால் செய்வதில் அவர்களின் அனுமதி தேவைப்படுகிறது, பட்டது என் விஷயத்தில் ஆகவே தான் இந்த முறையில் எழுதுகிறேன். உங்களுக்கு வசதிப்பட்டால் இ-கலப்பையை நிறுவிக் கொள்ளவும். தட்டச்சு செய்யும் முறையில் மற்றம் அதிகம் இல்லை. ஹ தவிர, இம்முறையில் ஹ போட நீங்கள் ஹைஃபன் போட்டுவிட்டு ஹெச் ஆங்கில எழுத்தைத் தட்ட வேண்டும். இ-கலப்பையில் ஹெச் ஆங்கில எழுத்தைத் தட்டினால் போதும். இம்மாதிரிச் சில சில வேறுபாடுகள் தான் வரும். முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள். லிங்க் கொடுத்திருக்கிறேன்.
thamizha.com go to this website and download the e-kalappai with the tauvelsoft keyboard. and the keyboard sign will come to your task bar. click on the sign and you will get three options. one is english, the other are two tamil typing options. click the unicode tamil option and start to type in tamil directly in your blog and give your comments directly to others blogs and answers to your blog comments also. Enjoy! Congratulations!
At 4:28 AM, Geetha Sambasivam said…
enable comment moderation to avoid unnecessary comments. It is a request.
At 5:57 AM, manipayal said…
Hallo Geetha madam, We were in 3rd cross road,Kanakasabai Nagar.My father Mr.Maniyan had a shop in Mela Veedhi Known as AJANTHA Electricals & so was known as Ajantha Mani Iyer.Any chance you have heard before? Are U from CDM & now where are U located?
Thanks for the link & suggestion.
At 3:31 AM, Geetha Sambasivam said…
எனக்குச் சிதம்பரம் இல்லை. என்னோட கணவர் அங்கே ஆறுமுகநாவலர் பள்ளியில் படித்தார். அவரோட மாமா (தாய் மாமா) அங்கே ஸ்ரீராம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை வைத்திருந்தார். என் கணவர் பெயரும் சாம்பசிவம் தான். சிதம்பரத்தில் ஸ்ரீராமலிங்க தீட்சிதர் தான் எங்கள் கட்டளை தீட்சிதர்.
Post a Comment
<< Home