market passion

Friday, June 15, 2007

எஸ்.பி.பி எம்ஜிஆருக்கு பாடியது எப்படி

பாடல் வரிகள் எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்டன.ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடத்த அனுமதியும் பெற்றாகிவிட்டது. இந்த நேரத்தில்தான் எஸ்.பி.பி சற்றும் எதிர்பாராமல் நோய்வாய்பட்டு ரிகர்சலின் போது சரியாக பாட முடியவில்லை.மனம் நொந்தபடி வீட்டுக்கு சென்ற எஸ்.பி.பின் உடல் நிலை மேலும் மோசமாகியது.அடுத்த நாள் ரெகார்டிங் போக வந்த கார் ட்ரைவரிடம் தன்னால் பாட இயலாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார் எஸ்.பி.பி. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் போனது. தன் விதியை எண்ணி நொந்த எஸ்.பி.பி இன்னேரம் டி.எம்.யெஸ் பாடி ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டு இருக்கும் என்று எண்ணினார். அப்போது அவரது ஒரே நம்பிக்கை மீண்டும் ஒரு முறை எம்.ஜி.ஆர் கூப்பிடுவார் என்பதுதான்.

திடீரென்று ஒரு நாள் மீண்டும் எம்.ஜி.ஆர் கம்பெனி கார் எஸ்.பி.பி வீட்டுக்கு வந்தது. வந்த ப்ரொடக்க்ஷன் அஸிஸ்டென்ட் கேட்டார் - நீங்கள் உடல் நலம் தேறி விட்டீர்களா? ஆயிரம் நிலவே வா பாட்டு பாட வரமுடியுமா? என்று கேட்டார்.இன்னும் உடல் முழுதாக தேறவில்லையெனினும் இந்த முறை வாய்ப்பை அவர் விடுவதாக இல்லை. சரி வருகிறேன் என்று சொல்லி தன் தந்தையுடன் காரில் ஏறினார். அவர் ஆச்சர்ரியத்தை புரிந்து கொண்டு வந்தவர் சொன்னார் - அந்த பாடல் இன்னும் ஷூட்டிங் செய்யப்படவில்லை ஏனென்றால் பாடலை எஸ்.பி.பிதான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்லி விட்டார் என்று.
ஒரு பக்கம் அளவு கடந்த சந்தோஷம். ஒரு பக்கம் உடல் சோர்வு. 11 டேக்குகளுக்கு பிறகு கே.வி.மகாதேவன் பாடலை ஒகே செய்தார். பாடலைப்பாடிய உற்சாகத்துடனும் உடல் சோர்வுடனும் இருந்த எஸ்.பி.பி தைரியத்தை வரவழித்து கொண்டு எம்.ஜி.ஆரை கேட்டார் ஏன் இவ்வுளவு நாள் பொறுத்திருந்தீர்கள் என்று. அதற்கு எம்.ஜி.ஆர் சொன்னாராம் - தம்பி முதல் முதலாக நீ தமிழில் பாடுகிறாய். அதுவும் எம்.ஜி.ஆருக்கு பாடுகிறேன் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லியிருப்பாய். மேலும் முதல் பாடலிலேயே உன்னை மாற்றினால் உன் எதிர்காலமே பாதிக்கப்படும் நீ சரியாக பாடவில்லை அதனால்தன் எம்.ஜி.ஆர் மாற்றிவிட்டார் என்று ஒரு பேச்சு நிலவும் அதனால்தான் நான் காத்திருந்தேன் என்று. நன்றி சொல்ல முடியாமல் நா தழுதழுக்க கண்கள் குளமடைய திகைத்து நின்ற எஸ்.பி.பிக்கு கை குடுத்து வாழ்த்திவிட்டு போனார் எம்.ஜி.ஆர். இதனால் இன்றும் எம்.ஜி.ஆரின் உதவி செய்யும் குணத்தை எஸ்.பி.பி மறக்காமல் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் பாடிய முதல் தமிழ் பாடல் "ஆயிரம் நிலவே வா" வாக இருந்தாலும் அவர் பாடி முதலில் வெளி வந்த படம் "பால்குடம்" பாடல் "மல்லிகை பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக" இந்த படம் 14-01-1969 அன்று பொங்கல் ரிலீஸ்ஸாக வெளியானது. இசை அமைப்பாளர் எம்.ஸ்.வீ அவர்கள்.
இரெண்டாவது படம் 'குழந்தை உள்ளம்" பாடல் "முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" இசை அமைப்பாளர் - எஸ்.பி.பியை தெலுங்கில் அறிமுகப்படுத்திய திரு.கோதண்டபாணி அவர்கள்.
மூன்றாவது படம்தான் அடிமைப்பெண் இது 01-05- 1969 ரிலீஸ்ஸானது. நான்காவது பாடல் 'இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி' - படம் சாந்தி நிலையம்.
ஐந்தாவது பாடல் "பவுர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் கடற்கரை மணலில் குளிப்போமா" படம் கன்னிப்பெண்.
இந்த 5 பாடல்கள்தான் தமிழ் சினிமாவில் எஸ்.பி.பின் முதல் வருட பாடல்கள்.
அந்த வருடத்தின் சிறந்த பிண்ணணி பாடகராக தமிழக அரசால் தேர்தெடுக்கப்பட்டதும் அதன் பிறகு தமிழ் சினிமா பாடல்கள் புத்துணர்ச்சி பெற்றதும் நாம் எல்லொரும் அறிந்ததே.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home