happy birthday - a.r.rahman
இன்று திரு ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள். நம்ப முடியவில்லை அவருக்கு 42 வயது என்று. 1966 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த அவர் ரோஜா படத்தின் மூலம் நமக்கு கிடைத்தார். அந்த முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல் மேலும் மூன்று முறை(மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்) சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார். தமிழ் மற்றும் இந்திய இசையை உலகளவில் பெயர் பெறச்செய்தார். வந்தே மாதரம் பாடலின் மூலம் மீண்டும் தேசபற்றை இந்தியார்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் உயிர்ப்பித்தார்.
அவருடைய சிறந்த பாடல்களை பட்டியல் போட்டால் இந்த வருடம் முழுவதும் நான் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். இங்கே ஒரே ஒரு பாடல். இந்திரா படத்தில் வரும் "நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லயே" என்ற இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.இதமான "கமாஸ்" ராகத்தில் அமைந்த இந்த பாடலை மொட்டை மாடியில் நிலாவை பார்த்தபடி கேட்டு பாருங்கள்.அந்த சுகமே தனி. இன்னுமொரு விஷயதிற்காகவும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும். இந்தபாடலில் ஆடும் ஆறு குழந்தைகளில் ஒருத்தி என் அண்ணன் மகள் நித்யா( நீல பட்டு பாவாடையும் சிகப்பு சட்டையும் அணிந்தவள் - திரு.தனஞ்செயன் அவர்களிடம் நாட்டியம் பயின்றவள்)
இதோ உங்களுக்காக - நிலா காய்கிறது

Labels: a.r.rahman, nila kaigirathu, nithya
2 Comments:
At 10:51 PM, Geetha Sambasivam said…
மொக்கை போடத் தெரியாத உங்களை ரசிகனின் தொந்தரவு தாங்க முடியாமல் மொக்கைக்கு அழைத்துள்ளேன். போடலைனா, அப்புறம் கிடைக்கப் போகும் "ஆப்பு"க்குப் பொறுப்பு நீங்களே தான்! :P
At 10:05 PM, Sudha said…
My birthday wishes to ARR.And thank you for remembering him on his birthday.
Post a Comment
<< Home