market passion

Thursday, December 06, 2007

கச்சேரி ஸீசன் - 4.ஆனந்த பைரவி

இந்த ராகம் ஷியாமா சாஸ்திரிகளின் ஒரு favourate ராகம் ஆகும். ஆனந்த பைரவி என்றாலே ஷியாமா சாஸ்திரிகளின் 'மரிவேர கதி" தான் நினைவுக்கு வரும். இவருடைய மற்றொரு பாடலான "ஓ ஜகதாம்பா" வும் பிரசித்தமானது. இந்த ராகம் பொதுவாக ஆனந்தமான, ரம்மியமான moodஐ குறிக்கும். இதோ மகாராஜபுரம் சந்தானம் அப்படி ஒரு மன நிலைக்கு நம்மை அழைத்து செல்கிறார். கேட்டு ரசியுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


தனிப்பாடல்களில் மிகவும் பிரபலமானது
" கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா"
இந்த பாடல் பல ராகங்களால் ஆனது(ராகமாலிகா) முதல் சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும் ரஞ்ஜனி ஆகிய ராகங்கள். இவை எல்லாம் அந்த பாடலிலேயே வரும்.

திரை இசை பாடல்கள்

1. போய் வா மகளே போய் வா - கர்ணன்
2. நான் ஆட்சி செய்துவரும் - ஆதி பராசக்தி
3. சபரி மலையில் வண்ண சந்ரோதயம் - ஸ்வாமி ஐயப்பன்
4. காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் - காவல்காரன்(எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அற்புதமான பாடல்)
5. கொஞ்ஜ நாள் பொறு தலைவா - ஆசை(இசை அமைப்பாளர் தேவாவிற்கு அவர் இசையிலேயே மிகவும் பிடித்த பாடல் - பாடல் வரிகள் உள்பட)



6. மெட்டு போடு மெட்டு போடு -டூயட்
7. சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - பூவெல்லாம் கேட்டு பார்
அதிசயமாக இளையராஜா இசையில் இந்த ராகத்தில் பெரிய ஹிட் எதுவும் இல்லை.

Labels: , ,

6 Comments:

  • At 9:13 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    ஆனந்தமான ஆனந்தபைரவி..

     
  • At 8:25 AM, Blogger Mahesh said…

    Aaga...enna superana paadalgal...I think the beauty of this raga is the feel of freshness in it.

     
  • At 8:26 AM, Blogger Mahesh said…

    My mom's comment:

    Ovvoru raagatha pathi podum bodhu..adhoda aarohanam avarohanam adhaiyum potta nalla irukkum...

     
  • At 3:10 AM, Blogger manipayal said…

    First I thought like that M'aam but then decided against it because it will be too technical.

     
  • At 3:14 AM, Blogger manipayal said…

    இன்னொன்று, கர்னாடக சங்கீதம் தெரிந்தவர்களுக்கு அது தேவையில்லை. தெரியாதவர்களுக்கு அது உபயோகமில்லை.ரொம்ப கேள்வி கேட்டா பதில் சொல்லற அளவுக்கு எனக்கும் ஞானமில்லை

     
  • At 8:49 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    ஆனந்தபைரவியின் ஆரோகானம்
    ஸகரிகமபதநிஸ
    அவரோகனம்
    ஸநிதபமகரிஸ

     

Post a Comment

<< Home