market passion

Friday, November 30, 2007

கச்சேரி சீசன் - 1. ஹிந்தோளம்

திரை இசை பாடல்கள் அவ்வபொழுது நமக்கு சில ராகங்களை கற்று கொடுத்துள்ளது
அந்த பாடல்கள் வெளி வந்த பிறகுதான் பல பேருக்கு அந்த ராகம் பிரபலமாகியது. உதாரணமாக கர்ணா படத்தில் வரும் மலரே மவுனமா பாடலுக்கு பிறகுதான் தர்பாரி கானடா எல்லோருக்கும் தெரிந்தது. அந்த வரிசையில் சங்கராபரணம் படத்தில் வரும் சாமஜ வரகமனா பாடலை கேட்ட பின் தான் ஹிந்தோளம் சற்று பிரபலமாகியது.
சமீபத்தில் O.S.அருண் அவர்களின் இந்த பாட்டை கேட்டேன்/பார்த்தேன். இதோ நீங்களும் பார்த்து/கேட்டு ரசியுங்கள். முதல் ஒரு நிமிடத்திற்கு பிறகு ஆடியோ தெளிவாக இருக்கும். -2.26 to -2.11 நிமிடங்களில் சாமஜ வரகமனாவில் வரும் அதே ஸ்வரங்கள் வருவதை கவனியுங்கள்.பாடலை இசை அமைத்தவர் திருமதி உமா ரமணன்.



அடுத்து உன்னி கிருஷ்ணன் குரலில் ஒரு அருமையான பக்தி பாடல் ஹிந்தோளம் ராகத்தில்



ஹிந்தோளத்தில் மற்ற கர்னாடக/பக்தி பாடல்கள்

1. ராமனுக்கு மன்னன் முடி தரித்தாரே
2. துணைபுரிந்தருள் (ஷேஷகோபாலன் பாடினால் கேட்டு கொண்டே இருக்கலாம்)
3. சலமேல ரா சாகேத ராமா
4. பஜரே கோபாலம்

ஹிந்தோளத்தில் தமிழ் திரை பாடல்கள்

1. நானாக நான் இல்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே
2. பொத்தி வச்ச மல்லிக மொட்டு - மண் வாசனை
3. நான் தேடும் செவ்வந்தி பூ இது - தர்மபத்தினி(இந்த பாட்டின் ஆரம்பத்தில் இளையராஜா ஒரு ஆலாபனை செய்வார் - அது அருமையிலும் அருமை)இதோ அந்த பாடல் உங்களுக்காக.

Get this widget | Track details | eSnips Social DNA


4. தரிசனம் கிடைக்காதா - காதல் ஓய்வதில்லை
5. ஓம் நமச்சிவாயா - சலங்கை ஒலி
6. மார்கழி பூவே - மே மாதம்
7. அச்சில் வார்த்த பதுமையும் நீயே - வரலாறு
8. ஆனந்த தேன் காற்று தாலட்டுதே
9. மனமே முருகனின் மயில் வாகனம் - மோட்டார் சுந்தரம் பிள்ளை
10.ஒரு ஜீவன் அழைத்தது

Labels: , ,

1 Comments:

  • At 10:44 AM, Blogger நாகை சிவா said…

    நான் தேடும் செவ்வந்தி!

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று :)

     

Post a Comment

<< Home