market passion

Saturday, December 08, 2007

கச்சேரி ஸீசன் - 5. ஷண்முகப்பிரியா

கர்நாடக சங்கீதத்தில் உள்ள கன ராகங்களில் இதுவும் ஒன்று. ஷண்முகப்பிரியா முருகனுக்கு மிகவும் பிடித்தமான ராகம் ஆகும். பல முருகன் பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருப்பதே இதற்கு உதாரணம். இந்த ராக ஆலாபனயை இங்கே கேளுங்கள்



இசை மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் " இசை மூலம் மருத்துவம்" என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். அவர் இந்த ராகத்தை பற்றி என்ன கூறுகிறார் -

Shanmugapriya

Shanmugapriya has the effect of sharpening the intellect of the singer as well that of the listener. It instils courage in one's mind and replenishes the energy in the body. This is not surprising Shanmugapriya being the beloved raga of Shanmuga, who was born out of the blazing wisdom-eye of Shiva.
I would attribute the success and prosperity I have attained in life to the constant chanting of Shanmuga stothrams in the Murugan temple of Kunnakkudy. "Parvathi nayakane," "Saravanabhava Ennum Thirumanthiram" of Papanasam Sivan are known for their sparkling verses. Harikesanallur Muthaiah Bhagavathar's "Vallinayakane" is another example.
Shanmugapriya was beautifully used to make the song "Maraindirundu Parkum" in the classic "Thillana Mohanambal" immortal. - The Hindu dt 26th Nov 2004.
அந்த பாடலை இப்போது பார்த்து/கேட்டு ரசிக்கலாம் வாங்க



மேலும் பல அற்புதமான பழய புதிய பாடல்கள்

1. நினைந்து நினைந்து நெஜ்ஜம் உருகுதே - சதாரம்
2. நெஞ்ஜில் குடியிருக்கும் அன்பருக்கு - இரும்புதிரை
3. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் - தூக்கு தூக்கி
4. முத்தைதிரு பத்தி - அருணகிரி நாதர்
5. பழம் நீ அப்பா ஞான பழம் நீ அப்பா - திருவிளையாடல் - கே.பி.சுந்தராம்பாளின் வெண்கல குரலில் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும் அந்த பாட்டு இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA



6. தம்தன தம்தன தாளம் வரும் - புதிய வார்ப்புகள்
7. ஊரு விட்டு ஊரு வந்து - கரகாட்டக்காரன்
8. மழை வருவது மயிலுக்கு தெரியும் - ரிஷிமூலம்
9. காதல் கசக்குதைய்யா - ஆண்பாவம்
10 கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி - வண்ண வண்ண பூக்கள்
11 தகிட ததிமி தகிட ததிமி - சலங்கை ஒலி
12 கண்ணுக்குள் 100 நிலவா இது ஒரு கனவா - வேதம் புதிது -
இந்தபாடல் இசை அமைத்தவர் தேவேந்திரன் அவர்கள். ஆனால் பல இணய தளங்களிலும், வலைகளிலும் இசை அமைத்தவர் இளையராஜா என்று குறிப்பிட்டுள்ளது. இது தவறு. திரு.எஸ்.பி.பி அவர்களின் குழையும் குரலுக்காகவும், வைரமுத்துவின் அற்புத வரிகளுக்காகவும், பல அமலா ரசிகர்களுக்காகவும் இதோ இங்கே அந்த பாடல்



மீண்டும் ஒரு ராகத்தோடு திங்கள்(10th Dec)அன்று சந்திக்கிறேன். Till then take care and have a great weekend.

Labels: , ,

3 Comments:

  • At 12:11 AM, Blogger Geetha Sambasivam said…

    "இசை மூலம் மருத்துவம்" கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் இதை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்துகிறார். பொதிகையில் அடிக்கடி பார்க்கலாம். ராகங்களில் தேர்ச்சியோ, அல்லது உங்கள் அளவு ஞானமோ இல்லாட்டியும் நல்லா ரசிப்போம் நாங்க இருவரும். இத்தனைக்கும் என் கணவரின் தாத்தா பிரபல ஃப்ளூட் வித்வான். ஃப்ளூட் நவநீதத்தின் குரு. ஆனாலும் எங்க பெண்ணைத் தவிர யாருமே இசை கற்கவில்லை. இது எங்களுக்கு இன்னும் ஒரு குறையாகவே உள்ளது.

     
  • At 12:13 AM, Blogger Geetha Sambasivam said…

    நல்லா ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பாடல்களாய்ப் போட்டு இருக்கீங்க. ஆனால் என்னோட கணினியில் கொஞ்சம் பிரச்னையா இருக்கு. அதைச் சரி பண்ணினதும் தான் கேட்கணும். :(

     
  • At 10:56 PM, Blogger manipayal said…

    எனக்கும் பெரிய ஞானம் ஒன்றும் இல்லை மேடம். கேள்வி ஞானமும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும்தான் அதுக்கே ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்.

     

Post a Comment

<< Home