market passion

Wednesday, December 12, 2007

கச்சேரி ஸீசன் - 7.ஆந்தோலிகா

இந்த ராகம் மத்யமாவதியுடன் மிகவும் நெருக்கமானது. இரண்டுக்கும் ஆரோகனம் ஒன்றுதான். அவரோகனத்தில் ஒரே ஒரு ஸ்வரம் மட்டும் மாறுபடும். தியாகராஜர் தான் இந்த ராகத்தை மிகவும் பிரபலப்படுத்தியதாக சொல்வார்கள். அவருடைய "ராக சுதா ரஸ" மிகவும் பிரசித்தி பெற்ற பாடல். மதுரை சோமு அவர்கள் பாடிய "ராக சுதா ரஸ". இங்கே க்ளிக்கவும்

Search - Global - andholika - Music India OnLine

வித்வான் காஞ்சீபுரம் நைனா பிள்ளை அவர்களும் ஜி.என்.பி அவர்களும் இந்த ராகத்தை மேலும் பிரபலபடுத்தினார்கள்.ஜி.என்.பி அவர்கள் இந்த ராகம் பாடும் அழகை பிரபல இந்துஸ்தானி வித்வான் படே குலாம் அலி கான் வெகுவாக பாராட்டியதாக இசை வட்டாரங்களில் சொல்லுவதுண்டு.முத்துத்தாண்டவரின் "சேவிக்க வேண்டும் ஐய்யா" என்ற பாடலும் இதே ராகம்தான்.

திரை இசையில் இந்த ராகத்தில் எனக்கு தெரிந்து ஒரே ஒரு பாடல்தான் உள்ளது. முள்ளும் மலரும் படத்தில் வரும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே" என்ற பாடல் இசை அமைத்தவர் இளையராஜா. இந்த பாடலில் வரும் " லெ லெ லே லெ லெ" என்னும் hummingம் அதை தொடர்ந்து வரும் வரிகளும் கிராமிய இசையை அடிப்படையாக கொண்டது. இந்த இசை திருமதி பத்மா சுப்ரமணியம் அவர்கள் தனது நடனத்திற்கு இசை அமைத்ததாகவும் திரை இசைக்கு வருவதற்கு முன்னால் ஒரு கால கட்டத்தில் அவருடன் பணியாற்றிய இளையராஜா இதை உபயோக படுத்திவிட்டதாகவும் அவரே ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறினார். ஆனால் இளையராஜா இது போல நூற்றுகணக்கான கிராமிய இசை ராகத்தையும் பாடல்களையும் அவர் சிறு வயது முதலே கேட்டுள்ளதாயும், அந்த அடிப்படையிலேயே பாடலை மெட்டமைத்ததாகவும் கூறுகிறார். உண்மை எதுவாக இருந்தாலும் சரி, நமக்கு ஒரு அருமையான பாடல் கிடைத்தது. இதோ உங்களுக்காக அந்த பாடல்

Labels: , ,

2 Comments:

Post a Comment

<< Home