வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வணக்கம் நண்பர்களே,
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 17 நாள் லீவில் சென்னை போய் 4ஆம் தேதி மீண்டும் சௌதி வந்தாச்சு. கிளம்பும்போது கூட என்னை அனுப்ப மனசில்லாம ஊரே அழுதது.கார்த்தால இருந்து ஒரே மழை. வேற வழி இல்லாம கிளம்பி வந்தேன். சென்னையில் புலியை( நாகை சிவா) சந்தித்து பின்பு அ(தை)வரையும் அழைத்துகொண்டு அண்ணா நகர் தாண்டின உடனே இருக்கும் அம்பத்தூரில்(ஏன் நிறைய பேர் இதை ரொம்ப தூரம்கராங்க. ஒரு வேள நடந்தே போயிருப்பாங்களோ!!!!!!!!!!!) உள்ள கீதா மேடம் வீட்டிற்கு போனேன். வெங்காய பஜ்ஜி, பால்கோவா மற்றும் அருமையான காப்பி கொடுத்தார்கள். நமது வலை நண்பர் வேதாவும் அங்கே வந்திருந்தார்கள். திரு.சாம்பசிவம் அவர்களுடன் சொந்த ஊரான சிதம்பரம் பற்றி பழங்கதைகள் பேசினேன். T R C சாரிடம் இரண்டு முறை பேசினேன் ஆனால் நேரில் சந்திக்க முடியவில்லை. கிளம்பும் அன்று அவரே வருவதாக சொன்னார் ஆனால் மழை வில்லானாக வந்து எங்கள் சந்திப்பை தடுத்தது.
இரண்டு கர்னாடக இசை கச்சேரிகள்(ஓ.எஸ்.அருண், சஞ்ஜய் சுப்பிரமணியன்), ஒரு நாள் திருவண்ணாமலை ஸ்வாமி தரிசனம் மற்றும் கிரிவலம், இரண்டு நாள் நண்பர்களுடன் கும்மாளம் என லீவு ஜாலியாக போனது. இப்பொழுது மீண்டும் ஆபீஸ். மீண்டும் பிளாக். என் சிந்தனை ஒட்டகத்தை(பின்ன சௌதில இருந்துகிட்டு குதிரைன்னா சொல்ல முடியும்)தட்டி விடறேன். படிக்கறதும் படிக்காததும், கமெண்ட்டறதும் கமெண்ட்டாததும் உங்க இஷ்டம்

Labels: back to blog, back to form
0 Comments:
Post a Comment
<< Home