market passion

Thursday, January 10, 2008

இதுதாண்டா மொக்கை

என்னடா இது, இந்த கீதா மேடம் இப்படி சொல்லிட்டாங்க, சில பேர் எழுதறதெல்லாம் மொக்கைகறாங்க ஆனா எனக்கு மொக்கயே போட தெரியாதுங்கறாங்க. அப்ப நம்ப எழுதறதெல்லாம் உருப்படியானதா??? இல்ல அவங்க எதுவுமே படிக்கல்லையா??? ஒண்ணுமே புரியல்லடா சாமி.

சரி விஷயத்துக்கு வருவோம். எத பத்தி மொக்கை போடலாம். ஸ்டாக் பத்தியும் எழுதகூடாதுங்கறாங்க. ஓ கே. மொக்கை என்பது "கை" என்று முடிவதால் டி.ராஜேந்தர் ஸ்டைலில் எழுதலாம் என்று முடிவு செய்ததால் வந்த வினை இது.


வாழ்க்கைக்கு வேண்டியது நம்பிக்கை
ஆனால் நம் கையில்தான் உள்ளது நம் வாழ்க்கை

நெல்லு குத்த வேண்டும் உலக்கை
முழம் போட வேண்டும் வெரும்கை

எல்லா அரசியல்வாதியின் ஆசை முதலமைச்சர் இருக்கை
ஆனால் அது முள் மேல் நடக்கும் ஒரு வாழ்க்கை

முடியெல்லாம் கொட்டிபோனால் அது வழுக்கை
பல்லெல்லாம் கொட்டிபோனால் அது பொக்கை

காங்கிரஸின் சின்னம் ஒரு கை
ஏர் டெக்கானின் சின்னம் இரு கை

சாத்தமுது எனக்கு பிடித்த தளிகை
அதை சாப்பிட தினம் வரும் காக்கை

திரையில் நடிக்க வேண்டும் என்பது என் தணியாத வேட்கை
ஆனல் என் வீட்டிலேயே அதற்கு வந்தது தணிக்கை

யானைக்கு இருப்பது தும்பிக்கை
பிள்ளையாருக்கு இருப்பது துதிக்கை!!!!!!!!!!!!!

இந்த போஸ்ட் என் 80ஆவது எண்ணிக்கை
ஆனால் இதுவே என் முதல் மொக்கை


இப்ப சொல்லுங்க, இனி மொக்கை போட சொல்லி என்ன யாராச்சும் கேப்பீங்களா?????

Labels: ,

1 Comments:

  • At 11:12 PM, Blogger Geetha Sambasivam said…

    என்னங்க இது? 2 நாளா உங்க ப்ளாகே திறக்கலைன்னு பார்த்தா "மொக்கை" போட்டிருக்கீங்க, அதானா? அது சரி, 4 பேரைக் கூப்பிட மறந்துட்டீங்களே, முதல்லே 4 பேரைக் கண்டு பிடிச்சுக் கூப்பிடுங்க!

     

Post a Comment

<< Home