market passion

Friday, December 14, 2007

கச்சேரி ஸீசன் - 8.ஹம்சாநந்தி

ஹம்சாநந்தி ஒரு ஜனரஞ்ஜகமான ராகம்.

1. ஸ்ரீ நிவாச திருவேங்கடமுடையாள் என்ற ஒரு அருமையான பாபனாசம் சிவன் பாடல்.
2. பாவன குரு பவனகுரு
3. ஷன மதுரா நாராயணம் - ஜெயதேவர் அஷ்டபதி . சுதா ரகுனாதனின் தேன்மதுர குரலில் அந்த பாடலை இங்கே கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


திரை இசையில் இளையாரஜா 4 அற்புதமான பாடல்களை தந்துள்ளார்.

1.ராத்திரியில் பூத்திருக்கும் - தங்க மகன்
2.வேதம் அணுவிலும் ஒரு நாதம் - சலங்கை ஒலி/சாகர சங்கமம்
3.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - பயணங்கள் முடிவதில்லை
4. வானம் நிறம் மாறும் - தாவணிக்கனவுகள்
5. காலையும் நீயே,மாலையும் நீயே - அந்த கால ஏ.எம்.ராஜாவின் ஒரு அருமையான மெலடி.

I am presenting 2 video songs for you in this raagam.First enjoy Kamal's brilliance in sagara sangamam in Hamsanandhi




Second Rajini's grace and style in Thanga magan in Hamsanandhi - In this song I feel S.janaki simply excelled SPB in brukas which is the beauty of this ragam.




அப்பாடா ஒரு வழியா 15 நாள்ல 8 ராகம் cover பண்ணியாச்சு. Another 5 to 7 ragams will be posted from the land of kacheeris - the singara Chennai from 18th.கச்சேரியெல்லாம் கேட்டுண்டே என் கதா காலக்ஷேபத்தை நடத்துகிறேன்.Bye,Bye.

Labels: , ,

Wednesday, December 12, 2007

கச்சேரி ஸீசன் - 7.ஆந்தோலிகா

இந்த ராகம் மத்யமாவதியுடன் மிகவும் நெருக்கமானது. இரண்டுக்கும் ஆரோகனம் ஒன்றுதான். அவரோகனத்தில் ஒரே ஒரு ஸ்வரம் மட்டும் மாறுபடும். தியாகராஜர் தான் இந்த ராகத்தை மிகவும் பிரபலப்படுத்தியதாக சொல்வார்கள். அவருடைய "ராக சுதா ரஸ" மிகவும் பிரசித்தி பெற்ற பாடல். மதுரை சோமு அவர்கள் பாடிய "ராக சுதா ரஸ". இங்கே க்ளிக்கவும்

Search - Global - andholika - Music India OnLine

வித்வான் காஞ்சீபுரம் நைனா பிள்ளை அவர்களும் ஜி.என்.பி அவர்களும் இந்த ராகத்தை மேலும் பிரபலபடுத்தினார்கள்.ஜி.என்.பி அவர்கள் இந்த ராகம் பாடும் அழகை பிரபல இந்துஸ்தானி வித்வான் படே குலாம் அலி கான் வெகுவாக பாராட்டியதாக இசை வட்டாரங்களில் சொல்லுவதுண்டு.முத்துத்தாண்டவரின் "சேவிக்க வேண்டும் ஐய்யா" என்ற பாடலும் இதே ராகம்தான்.

திரை இசையில் இந்த ராகத்தில் எனக்கு தெரிந்து ஒரே ஒரு பாடல்தான் உள்ளது. முள்ளும் மலரும் படத்தில் வரும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே" என்ற பாடல் இசை அமைத்தவர் இளையராஜா. இந்த பாடலில் வரும் " லெ லெ லே லெ லெ" என்னும் hummingம் அதை தொடர்ந்து வரும் வரிகளும் கிராமிய இசையை அடிப்படையாக கொண்டது. இந்த இசை திருமதி பத்மா சுப்ரமணியம் அவர்கள் தனது நடனத்திற்கு இசை அமைத்ததாகவும் திரை இசைக்கு வருவதற்கு முன்னால் ஒரு கால கட்டத்தில் அவருடன் பணியாற்றிய இளையராஜா இதை உபயோக படுத்திவிட்டதாகவும் அவரே ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறினார். ஆனால் இளையராஜா இது போல நூற்றுகணக்கான கிராமிய இசை ராகத்தையும் பாடல்களையும் அவர் சிறு வயது முதலே கேட்டுள்ளதாயும், அந்த அடிப்படையிலேயே பாடலை மெட்டமைத்ததாகவும் கூறுகிறார். உண்மை எதுவாக இருந்தாலும் சரி, நமக்கு ஒரு அருமையான பாடல் கிடைத்தது. இதோ உங்களுக்காக அந்த பாடல்

Labels: , ,

Sunday, December 09, 2007

கச்சேரி ஸீசன் - 6.மத்யமாவதி

1. ஹரிவராஸனம்( சரணம் ஐயப்பா)
2. கற்பகமே கடை கண் பாராய் - பாபனாசம் சிவன்
3. பாஹி ராம ப்ரபோ - பத்ராசல ராமதாஸ்
4. பாலின்ஞ்சு காமாக்ஷி -
5. வெங்கடேசா நின்னு - தியாகராஜர் - T.N.ஷேஷகோபாலன் அவர்கள் குரலில் அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்
Get this widget | Track details | eSnips Social DNA



திருப்பதி மலை ஏறும் பொழுது வழியெங்கும் ஒலிக்கும் "ஸ்ரீவெங்கடேசம் மனஸா ஸ்மராமி" மத்தியமாவதி ராகம் தான். இதோ அந்த வெங்கடேச பெருமாளின் ஸ்லோகத்தை கேளுங்கள்.
இந்த பாடல்/ஸ்லோகம் சுமார் 20 நிமிடங்கள் - பொறுமையும் நேரமும் இருப்பவர்கள் முழுதும் கேட்கலாம்.குறைந்தது 2 நிமிடங்களாவது கேட்கவும்.

DevotionalSongs.com Please see on the left hand side of the page -under the heading "Sri Venkatesa Manasa Smarami" and click "Sri Sesha Saila" to hear the song.Sorry I could not upload it directly.

இப்பொழுது இதே ராகத்தில்(காப்பி அடித்து-என்று சொல்பவர்கள் சொல்லலாம்) இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்கள் "காமராசு" என்ற படத்தில் கொடுத்த பாடலை கேளுங்கள்.
RAAGA - Kamarasu - Tamil Movie Songs Please select the song "Pathi Nila(பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு)and play.

மற்ற திரை இசை பாடல்கள்

1. கொஞ்ஜும் மைனாக்களே - கண்டு கொண்டேன் க.கொ
2. ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் - மண்வாசனை
3. விழாமலே இருக்க முடியுமா - ஸ்டூடண்ட் No. 1( இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஏன் சரண் இன்னும் நிறைய பாடவில்லை என்று நினைக்கிறேன்)
4. கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் - மதுர
5. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு - கொடி பறக்குது
6. முத்துக்களோ கண்கள் - நெஞ்ஜிருக்கும் வரை( A CLASSIC SONG BY T.M.S & P.Suseela)
7. இன்ப ராகங்கள் நெஞ்ஜுக்குள்ளே பொங்குகின்ற - ஹலோ பிரதர்
8. அடிப்பெண்ணே பொன்னூஞ்ஜல் ஆடுது இளமை - முள்ளும் மலரும்(The orchestrisation in this song is simply mind boggling - HATS OFF TO I.R)
9. ஆகாய கங்கை - தர்ம யுத்தம் - மலேசியா வாசுதேவனின் வசீகர குரலில் தலைவர் ரஜினி ஸ்டைலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் இதோ அந்த பாடல் உங்களுக்காக





அந்தோலிகா - இந்த ராகம் மத்யமாவதி ராகத்திற்கு மிகவும் நெருக்கமானது. இந்த ராகம் பற்றியும் இதில் இளையராஜா மெட்டமைத்த ஒரு பாடல் பற்றிய சர்ச்சை பற்றியும் தெரிந்து கொள்ள Please wait for 2 days.Bye,Bye

Labels: , ,

Saturday, December 08, 2007

கச்சேரி ஸீசன் - 5. ஷண்முகப்பிரியா

கர்நாடக சங்கீதத்தில் உள்ள கன ராகங்களில் இதுவும் ஒன்று. ஷண்முகப்பிரியா முருகனுக்கு மிகவும் பிடித்தமான ராகம் ஆகும். பல முருகன் பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருப்பதே இதற்கு உதாரணம். இந்த ராக ஆலாபனயை இங்கே கேளுங்கள்



இசை மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் " இசை மூலம் மருத்துவம்" என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். அவர் இந்த ராகத்தை பற்றி என்ன கூறுகிறார் -

Shanmugapriya

Shanmugapriya has the effect of sharpening the intellect of the singer as well that of the listener. It instils courage in one's mind and replenishes the energy in the body. This is not surprising Shanmugapriya being the beloved raga of Shanmuga, who was born out of the blazing wisdom-eye of Shiva.
I would attribute the success and prosperity I have attained in life to the constant chanting of Shanmuga stothrams in the Murugan temple of Kunnakkudy. "Parvathi nayakane," "Saravanabhava Ennum Thirumanthiram" of Papanasam Sivan are known for their sparkling verses. Harikesanallur Muthaiah Bhagavathar's "Vallinayakane" is another example.
Shanmugapriya was beautifully used to make the song "Maraindirundu Parkum" in the classic "Thillana Mohanambal" immortal. - The Hindu dt 26th Nov 2004.
அந்த பாடலை இப்போது பார்த்து/கேட்டு ரசிக்கலாம் வாங்க



மேலும் பல அற்புதமான பழய புதிய பாடல்கள்

1. நினைந்து நினைந்து நெஜ்ஜம் உருகுதே - சதாரம்
2. நெஞ்ஜில் குடியிருக்கும் அன்பருக்கு - இரும்புதிரை
3. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் - தூக்கு தூக்கி
4. முத்தைதிரு பத்தி - அருணகிரி நாதர்
5. பழம் நீ அப்பா ஞான பழம் நீ அப்பா - திருவிளையாடல் - கே.பி.சுந்தராம்பாளின் வெண்கல குரலில் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும் அந்த பாட்டு இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA



6. தம்தன தம்தன தாளம் வரும் - புதிய வார்ப்புகள்
7. ஊரு விட்டு ஊரு வந்து - கரகாட்டக்காரன்
8. மழை வருவது மயிலுக்கு தெரியும் - ரிஷிமூலம்
9. காதல் கசக்குதைய்யா - ஆண்பாவம்
10 கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி - வண்ண வண்ண பூக்கள்
11 தகிட ததிமி தகிட ததிமி - சலங்கை ஒலி
12 கண்ணுக்குள் 100 நிலவா இது ஒரு கனவா - வேதம் புதிது -
இந்தபாடல் இசை அமைத்தவர் தேவேந்திரன் அவர்கள். ஆனால் பல இணய தளங்களிலும், வலைகளிலும் இசை அமைத்தவர் இளையராஜா என்று குறிப்பிட்டுள்ளது. இது தவறு. திரு.எஸ்.பி.பி அவர்களின் குழையும் குரலுக்காகவும், வைரமுத்துவின் அற்புத வரிகளுக்காகவும், பல அமலா ரசிகர்களுக்காகவும் இதோ இங்கே அந்த பாடல்



மீண்டும் ஒரு ராகத்தோடு திங்கள்(10th Dec)அன்று சந்திக்கிறேன். Till then take care and have a great weekend.

Labels: , ,

Thursday, December 06, 2007

கச்சேரி ஸீசன் - 4.ஆனந்த பைரவி

இந்த ராகம் ஷியாமா சாஸ்திரிகளின் ஒரு favourate ராகம் ஆகும். ஆனந்த பைரவி என்றாலே ஷியாமா சாஸ்திரிகளின் 'மரிவேர கதி" தான் நினைவுக்கு வரும். இவருடைய மற்றொரு பாடலான "ஓ ஜகதாம்பா" வும் பிரசித்தமானது. இந்த ராகம் பொதுவாக ஆனந்தமான, ரம்மியமான moodஐ குறிக்கும். இதோ மகாராஜபுரம் சந்தானம் அப்படி ஒரு மன நிலைக்கு நம்மை அழைத்து செல்கிறார். கேட்டு ரசியுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


தனிப்பாடல்களில் மிகவும் பிரபலமானது
" கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா"
இந்த பாடல் பல ராகங்களால் ஆனது(ராகமாலிகா) முதல் சரணம் வரையில் ஆனந்த பைரவி ராகம். பிறகு வரும் சரணங்கள் கல்யாணி, பாகேஸ்வரி மற்றும் ரஞ்ஜனி ஆகிய ராகங்கள். இவை எல்லாம் அந்த பாடலிலேயே வரும்.

திரை இசை பாடல்கள்

1. போய் வா மகளே போய் வா - கர்ணன்
2. நான் ஆட்சி செய்துவரும் - ஆதி பராசக்தி
3. சபரி மலையில் வண்ண சந்ரோதயம் - ஸ்வாமி ஐயப்பன்
4. காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் - காவல்காரன்(எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அற்புதமான பாடல்)
5. கொஞ்ஜ நாள் பொறு தலைவா - ஆசை(இசை அமைப்பாளர் தேவாவிற்கு அவர் இசையிலேயே மிகவும் பிடித்த பாடல் - பாடல் வரிகள் உள்பட)



6. மெட்டு போடு மெட்டு போடு -டூயட்
7. சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - பூவெல்லாம் கேட்டு பார்
அதிசயமாக இளையராஜா இசையில் இந்த ராகத்தில் பெரிய ஹிட் எதுவும் இல்லை.

Labels: , ,

Tuesday, December 04, 2007

கச்சேரி சீசன் - 3.மாயா மாளவ கௌளை

இதுவும் திரை இசையில் அடிக்கடி பயன்படுத்தபடும் ராகம்.கர்னாடக இசையில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற பாடல்கள் அதிகம் இல்லை.
1. ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - முத்துத்தாண்டவர்
2. வந்தே மாதரம் என்போம் - பாரதியார்
3. தேவ தேவ கலயாமிதே - சுவாதித்திருநாள்


அந்த காலத்து பாடல்களில் ஆலயமணி படத்தில் வந்த ஒரு மறக்க முடியாத பாடல் - கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா, கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலை ஆகுமா? டி.எம்.எஸ் அவர்களின் கம்பீர குரலில் அந்த பாட்டை கேளுங்கள்.அவருடன் பாடுபவர் எல்.ஆர்.ஈஸ்வரி
Get this widget | Track details | eSnips Social DNA


இளையராஜாவின் சில அற்புதமான பாடல்கள்
1. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
2. பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோயில் கிழக்காலே
3. அந்தபுரத்தில் ஒரு மகராணி - தீபம்(சிவாஜியும் இளையராஜாவும் சேர்ந்த முதல் படம் - I still clearly remember my eldest brother,Who is crazy of sivaji-TMS combination, first told me that it is a great song from the new music director Ilayaraaja.That was in 1977 and I.R's 10th film)

4. பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்



5. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
6. குயில புடிச்சு கூண்டில் அடைச்சு – சின்னத்தம்பி
7. மதுர மரிகொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
8. மஞ்ஜள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு
9. என் தாயெனும் கோயிலை காக்க மறந்திட்ட - அரண்மனை கிளி
10 என்ன பாட்டு பாட என்ன தாளம் போட - பொண்ணு ஊருக்கு புதுசு
11 உயிரே உயிரே உருகாதே - ஒருவர் வாழும் ஆலயம்
12 இளம் காதல் வீணை - வெள்ளை புறா ஒன்று
13 மாசறு பொன்னே வருக - தேவர் மகன்

14.ஆனால் இவையெல்லாம் விட ஒரு அருமையான பாடல் சந்திரலேகா படத்தில் வரும் -"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" நானும் பலரைப்போல இதுவும் இளயராஜாவின் பல நல்ல பாடல்களில் ஒன்றாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அவருடைய இசை ஞானத்தை கர்நாடக இசை நன்கு தெரிந்த ஒரு நண்பர் எப்படி விளக்குகிறார் என்று பாருங்கள் .It is a bit lengthy and technical but I am tempted to include this observation to just highlight the level of understanding of music by the great Isai Gnani.

"""""""Hallo my dear friend - Since you've specified ‘Alla un aanai padi’ song under this raga, I’m encouraged to share something about this song with you. Its about the Prelude Sax piece of this Song. This part is a proof about Raaja’s level of understanding Music.. You keep hearing from him that “Music is one.. sawaras are one in all forms of Music”.. etc etc… Its because of such ideas that come to him that he says so…. I guess all Indian composers should openly admit Raaja’s supremacy about his understanding of what a ‘note’ or ‘scale’ mean. ( I mean swara or Shruthi). He really understand it at the same level of how the one who invented such concepts..

Let me come to the rationale behind all my superlative claims. This song ‘Allah un Aanai padi’ is set in pure maya malava gowlai.(I’ll abbreviate it as mmg). No point in time, the main melody thro’ out the song has a note outside mmg. The song scale is E major. (What I mean is, note E is the Sa for this song or in other words Shruthi of this song is ‘Moonu (3) kattai’). The song starts with a ‘Ohm’… But for this part E flat Major is the song scale. If you want, this ‘ohm’ part can be treated as either ‘Ni…. Sa….Ni’ in E major scale. But actually its ‘Sa…. Ri….Sa’ in E flat major scale(2.5 kattai shruthi). That means when some one first hears the song, he would assume the shruthi of the song is ‘rendra kattai’ without knowing what is there to follow. (I was such a victim !!!) If this is too much to digest, the crown comes during the start of the Sax piece.

We already discussed enough and more about how to form western chords inside carnatic scales long back in this forum when I had the opportunity to answer few queries of Mr.RS Balaji. We need to go back to them now. In mmg if you played the notes Ga + Dha + Ni you get another perfect major chord. For instance in this case, When you play Ga + Dha + Ni in E Major, You get G# Major chord. The sax piece that we were talking about starts after 4 bars of Rhythm once the ‘Ohm’ is over. But as and when 2 bars of the beat is over, a mild soft chord starts. This chord is G# Major.. (Or 6.5 kattai shruthi)… Sure enough.. shortly the sax piece starts with G# Major as the scale. If you want you can technically decode the starting of the sax piece as ‘ Pa Dha .. Pa Dha in the E major scale.. But actually it sounds Ri Ga.. Ri Ga.. in G# scale. I go crazy now… Luckily to my relief, a short veena piece comes and finishes the prelude as ‘Ga Pa ga ri Sa’ with the Sa as the note ‘E’ which remains the song scale for the rest of the portion..

If you want me to summarize in nutshell what happened, The Song started with D# (D# is same as E Flat) as scale.. Then the sax piece assumed G# as the scale and the song assumes E as the scale. In western perspective if you see, its very well common to increase the scale of a song (Typically towards the end) by half a note and continue singing with that. So that explains how a song in D# scale can switch to E. Also G# is a sub-chord in D# scale. So its very much explained how a G# chord still sounded very much in tune. Because the song started in D# and it switched from that base.

If you see from Carnatic perspective, all thro’ the prelude the notes used in the melody are in pakka mmg. So never the song sounds ‘abaswaram’.

Now coming to the combination of both the forms of music, Every other Indian composer who composes a song in mmg is forced to set chords and bass and western notes.. You will find every other composer invariably uses the combination of following chords if a song is composed in mmg: E, Am and G# minor (assuming the scale is E). No one dares to use G# major in a mmg song thou’ its still formed with notes of mmg scale. Because G# major really sounds little odd in the combination of other 3 chords). I guess Raaja is the only composer to use G# major effectively in a mmg song…

No ordinary musician can do this. To do this, you must understand western music to the level of Beethoven and carnatic music to the level of ‘Thyagaraja’. (This may seem an atrocious comparison to many.. But I guess I’ve justified it!!) This is the reason why I used so much of superlatives.

I really wonder how many of you really understood what I wrote. (You really need a Keyboard or a guitar or a melody instrument to infer what I’ve written). Please excuse me if it appeared too technical."""""""

மற்ற இசை அமைப்பாளர்களின் சில பாடல்கள்
1. கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் -டி.ராஜேந்தர்
2. ச ரி க மே ப த நி சே - மாத்தி யோசி - பாய்ஸ் - ஏ.ஆர்.ஆர்
3. என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - சொக்க தங்கம் - தேவா
4. அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான் - 1956ல் வெளி வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் - இசை - எஸ். தக்ஷிணாமூர்த்தி

I hope you enjoyed the post and the songs. Coming next is a ragam for pleasant moments -ஆனந்த பைரவி

Labels: , ,

Sunday, December 02, 2007

கச்சேரி சீசன் - 2.கல்யாணி

திரை இசை அமைப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த ராகம்.இதில் யமுன் கல்யாணி, அமீர் கல்யாணி மற்றும் மோகன கல்யாணி ஆகியவையும் அடங்கும்.

முதலில் கர்னாடக இசை பாடல்கள்

1. வனஜாக்ஷி - வர்ணம்
2. நிதி சால சுக்கமா - தியாகராஜர் கீர்த்தனை
3. வாசுதேவ யனி வெடலின - தியாகராஜர் கீர்த்தனை
4. செந்தமிழ் நாடெனும் போதினிலே - பாரதியார்
5. கண்ணனே என் கணவன் - பாரதியார்
6. பாவயாமி கோபால பாலம் - இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனை யமுன் கல்யாணி ராகத்தில் அமைத்தது.சமீபத்தில் "சொக்குதே மனம்" புகழ் பிரியா சுப்ரமணியம் அவர்களால் பிரபலமானது. அந்த பாடலை என்றும் நம்மை மயக்கும் எம்.எஸ் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


திரை இசை பாடல்கள்

1. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி
2. மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர்
3. இளயராஜா கல்யாணியில் கொடுத்த பல இனிமையான பாடல்களில் மிகவும் பிரபலமானது அவரே பாடிய "ஜனனி ஜனனி". இந்த பாடலை கேட்க இங்கே சுட்டவும்.

Get this widget | Track details | eSnips Social DNA


மேலும் சில பிரபலமான திரைப்பட பாடல்கள் - கல்யாணி ராகத்தில்
1. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்த்த உள்ளம் -
2. அம்மா என்றழக்காத உயிரில்லயே - மன்னன் -
3. வெள்ளை புறா ஒன்று - புதுக்கவிதை
4. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன்
5. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி
6. காற்றின் மொழி - மொழி
7. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு - இன்னுமொரு இளயாராஜா beauty


பவதாரணியே நல்லா பாடியிருக்கார்னா பாருங்களேன். Of course Shreya Ghoshal & Hariharan are simply supurb.My list of Kalyani songs are very long and it is very difficult to shortlist.
இவை தவிர அமீர் கல்யாணியில் சமீபத்து கலக்கல் இளம் மியூசிக் டைரக்டர் G.V.பிரகாஷ் கிரீடம் படத்தில் ஒரு அற்புதமான பாடல் தந்துள்ளார்.Amazing pronounciation by hindi singer Sonu Nigam(I hope Udit listens to him)



அமீர் கல்யாணியில் - மற்றும் சில பாடல்கள்

1. காடு திறந்து கிடக்கின்றது - வசூல் ராஜா MBBS - வித்யா சாகர்
2. ஜன்னல் காற்றாகி வா - தெனாலி - ஆ.ஆர்.ஆர்
3. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் - இளையராஜா

Hope you enjoyed the post. next ragam is Maya Malava Gowlai(மாயா மாளவ கௌளை)

Labels: , ,