இதுவரை 26 பெண் பார்த்தும் விச்சுவிற்கு இன்னும் விடிவு காலம் இல்லை. அம்மா இல்லாததால் அவன் அப்பா சுந்தரம் ரொம்பத்தான் படுத்தி எடுத்தார்.பெண்ணை அவனுக்கு பிடித்தால் அவன் அப்பாவுக்கு பிடிக்காது. இரண்டு பேருக்கும் பிடித்தால் பெண் வீட்டாருக்கு இவனை பிடிக்காது. இன்று 27வது பெண்ணை பார்க்க ஆபிஸில் மேனேஜரிடம் பர்மிஷன் கேட்க போனான்.
விச்சு : சார், எனக்கு இன்னிக்கு 2 hrs பர்மிஷன் வேணும் சார்.
மேனேஜர் : என்னப்பா, பொண்ணு பாக்க போறியா?
விச்சு : சார் நீங்க ஜீனியஸ் சார், எப்பிடி சார் கண்டு பிடிச்சீங்க?
மேனேஜர் : யோவ், நீதான் மாசத்துக்கு 2/3 தடவ பொண்ணு பாக்க பர்மிஷன் கேக்கறயே. சரி சரி இந்த தடவையாவது பொண்ணு கிட்ட தனியா பேசறேன்னு ஏதாவது தறுமாறா கேள்வி கேட்டு வைக்காதே, போய்ட்டு வா
விச்சு : ஒகே சார், தாங்க்ஸ் சார்.
மாலை மனி 5.30
விச்சுவின் அப்பா சுந்தரம் பட்டு வேஷ்டி ஜிப்பா என தடபுடலாக இருந்தார்.
விச்சு : அப்பா, ஒரு சின்ன சந்தேகம் பொண்ணு பாக்கறது உனக்கா இல்லை எனக்கா?
சுந்தரம் : இல்லடா, ஒரு பந்தா!!!!!!!!
விச்சு : போதும் போதும் ஒரு பந்தாவும் வேண்டாம், இப்பதான் புரியுது, ஏன் நிறைய பெண்கள் மாப்பிளையை பிடிக்கலைன்னு சொன்ன்னான்னு. நீங்க பண்ணிக்கற டிரஸ்ஸையும் போட்டுகற perfumaiயும் பாத்து நீங்கதான் மாப்பிள்ளைன்னு நெனச்சாளோ என்னவோ?
சுந்தரம் : சரி சரி ரொம்ப ஜோக் அடிக்கறதா நெனைக்காம கிளம்பு, டைம் ஆச்சு, அவாத்துக்கு எடுத்துண்டு போற சாமான் எல்லாம் ரெடியா?
விச்சு : அதெல்லாம் எடுத்துண்டு என் பிரெண்ட் சூரி நேரா அவாத்துக்கு வந்துடுவான்பா
மணி 6.15
பொண்ணோட அப்பா ஜானகிராமன் ; ஏண்டி கப்பு(அவர் வொய்ப் கற்பகம்) எல்லாம் ரெடியா இப்ப அவா வந்துடுவா, வத்ஸு(அதாங்க வத்ஸலா, அவர் பொண்ணு) நீ ரெடியாடிம்மா அவா கேள்வி கேட்டா இல்ல பாட சொன்னா தைரியமா பதில் சொல்லு,பாடு புரிஞ்ஜுதா
மணி 6.45
எல்லோரும் ஜானகிராமன் வீட்டுக்குள் நுழையாமல் வாசலில் நிற்கின்றார்கள்.
ஜானகிராமன் : வாங்கோ, வாங்கோ ஏன் வாசல்லயே நின்னுட்டேள்???
சுந்தரம் ; இல்ல இதுதான் வாசலான்னு ஒரு சந்தேகம்
ஜானகிராமன் ; அது ஒண்ணும் இல்ல, அந்த காலத்து வீடு,என் பொண்ணு வத்ஸு கொழந்தையா இருந்தப்ப வாங்கினது அதான் வாசல்கதவு கொஞ்ஜம் சின்னதா இருக்கு ஹி ஹி
சுந்தரம் : யோவ் கம்பியே இல்லாத ஒரு ஜன்னல வச்சுட்டு கதவுங்கறயே இது ஒமக்கே நல்லா இருக்கா
அதற்குள் விச்சு : அப்பா கொஞ்ஜம் சும்மா இருக்கேளா, சாரி சார் எங்க அப்பா இப்படித்தான் வெளிப்படையா பேசுவா
எல்லோரும் உட்கார்ந்தவுடன் , ஜானகிராமன்: முதல்ல டிபன் சாப்படறேளா இல்லா பொண்ண வரசொல்லட்டமா?
சுந்தரம்: பொண்ணயே டிபன கொண்டு வர சொல்லுங்கோ டூ இன் ஒன்
ஜானகிராமன் : சரி, அம்மா வத்ஸு டிபன எடுத்துண்டு நீயே வாம்மா
எல்லோரும் அந்த காலத்து வெள்ளிகிழமை ஒலியும் ஒளியும் பார்க்க வைய்ட் பண்ணுவது போல ஆர்வமாக இருந்தார்கள். சுமார் 3 நிமிடம் கழித்து 4 அடி உயரத்தில் 5 தட்டுகளுடன் வத்ஸு அனாயாசமாக வந்தாள். சுமாரான உயரம் உள்ள விச்சுவே ஒரு கணம் ஆஆஆடி போனன்.
விச்சு( மனதிற்க்குள்) கத்திரிக்காய் சைஸ்ல இருக்காளே, பேசாம கொத்ஸுன்னு பேர் வச்சுருக்கலாம்
ஜானகிராமன் : இதான் என் ஒரே பொண்ணு வத்ஸலா. நாங்க வத்ஸுன்னு கூப்பிடுவோம்,
அம்மா எல்லாருக்கும் டிபன் குடும்மா
சுந்தரம் : பொண்ணு நன்னா பாடுவான்னு சொன்னா ஒரு பாட்டு பாட சொல்லுங்கோளேன்
ஜானகிராமன் : ஓ பேஷா, வத்ஸு ஒன்னோட favorate பாட்டை பாடும்மா
வத்ஸு பாடுகிறாள் : குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ..........
விச்சு : அடிப்பாவி, என்னமா பொய் சொல்லறா பாதிக்கு மேல வளரவே இல்ல ,அதுவே பெரிய குறை, மனசுல பெரிய M.S இன்னு நெனெப்பு
ஒருவழியாக வத்ஸு பாடி முடிக்கிறாள்.
மேலும் தொடரும்.............
Labels: comedy, nagaichuvai நகைச்சுவை