market passion

Thursday, February 21, 2008

மூக்கின் மகிமை

எல்லோரும் ஜலதோஷம் பிடித்தால் முன்று அல்லது நான்கு நாட்கள் கஷ்ட்டபடுவார்கள். எனக்கு அந்த நாட்கள்தான் விடுமுறை. அப்பொழுது என் மனைவி செய்யும் சிசுருஷயை நீங்கள் பார்க்க வேண்டும். என் மூக்கு சரியாவதில்தான் அவளுக்கு எத்தனை அக்கறை. பின்ன என்னங்க, மோப்ப நாயால் அதுக்கு என்ன பிரயோஜனம்? அதை வளர்ப்பவர்களுக்கு தானே அதன் பயன் தெரியும்.ஹி ஹி இது ஒரு உதாரணம்தான், நீங்க கற்பனைய கன்னா பின்னான்னு அலைய விடக்கூடாது.

என் மூக்கு செய்யும் வேலை ஒன்றா ரெண்டா? சமையலுக்கு தேங்காய் உடைத்தவுடன் அது அழுகலா என்று சந்தேகம் வந்தால் அது ஆரம்ப நிலையா இல்லை ரொம்ப மோசமான்னு மோப்பம் பிடிச்சு சொல்லணும். அழுகல் தேங்காயை கண்டுபிடிப்பதில் நான் அத்தாரிட்டி என்பது அவள் அபிப்பிராயம்.

சரி அத விடுங்க. என் பையன் ஐந்து வயது வரை ராத்திரி படுக்கையிலே மூச்சா போவான். சில நாள் சீக்கிரமாகவே போய்விட்டால் காலையில் காய்ந்து விடும். அப்பொழுது எந்த எந்த துணிகளை தோய்க்க போடுவது, எந்த எந்த துணிகளை வெய்யிலில் காய போடுவது என்பதை நிர்ணயிப்பது என் மூக்குதான்.

அப்பறம் இந்த வெண்ணெய் காய்ச்சற அன்னிக்கி ரொம்ப கூரா மூக்கை தீட்டிக்கணும். அப்போது ஒருவிதமான வாசனை(நாற்றம்) வரும் பாருங்க. சரியா காய்ச்சல்லைன்னா நெய் மொழுக்குன்னு இருக்கும். மணல் மணலா காய்ச்சறேன்னு கொஞ்சம் விட்டா தீஞ்ச வாசனை வரும். அப்படி வந்துடுத்துன்னா நெய் நம் தட்டில் விழும் போது நமக்கு கொஞ்சம் திட்டும் விழும்.

சரி இந்த ஊதுவத்தி வாங்கற விஷயத்துக்கு வருவோம். சாம்ப்ராணி வாசனை அட்டையில் மட்டும் வருகிறதா அல்லது உள்ளிருந்து வருகிறதா என மாசல்வடையை கண்டிபிடிக்கும் எலி போல நான் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் ஏற்றியவுடன் கூட சரியாக தெரியாமல் அந்த நெருப்பு பொறி மூக்கில் பொட்டு வைக்கும் அளவுக்கு போவதும் உண்டு. அப்பொழுதும் வாசனையில்லாமல் நீ அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட எமாந்த்துட்டன்னு சொன்னாலும் கோபபடாம உங்கள் மூக்கின் முடிவே இறுதி முடிவு என்று ஒப்புக்கொள்ளும் நல்ல மனசு அவளுக்கு.

அப்பறம் மாசத்துல ஒரு நாள் ப்ரிஜ்ச க்ளீன் பண்ணும் போது பாக்கணும். பல தேதிகளில் செய்த பலவித ஐட்டங்கள் பலவிதமான சைஸ் பாத்திரங்களில் அடைபட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு ஐட்டம் ரொம்ப மோசமாக ஆகி இருந்தால் அந்த கருப்பு ஆட்டை(black sheep) கண்டுபிடித்து சொல்வதற்கும் என் மூக்கு பயன்படுத்தப்படும்.

இப்படி பல காரியங்களுக்கும் ஏன் ஆண்களின் மூக்கை பயன்படுத்துகின்றார்கள். அப்ப அவங்களுக்கு எட்டு கல்லோ இல்ல வைர கல்லோ பதித்த நகை அணிய மட்டும்தான் மூக்கா?

யாராச்சும் பதில் தெரிஞ்ச்ஜா சொல்லுங்கப்பா!!!!!!

Labels: ,

Tuesday, January 29, 2008

ஸ்டோரி டிஸ்கஷன் - part 2

உடனே ஹீரோயின் நீங்கள் பொருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி, நானும் உங்களுடன் வருகிறேன் அன்று கிளம்புகிறாள். அவர்களுக்கு ஒரு குருவியும் பல்லியும் உதவி செய்கின்றன.

தயாரிப்பாளர்: என்னது குருவியும் பல்லியுமா??

க.கபிலன்: பின்ன என்ன சார்! எவ்வளவு நாள்தான் நாய்,ஆடு,பாம்பு,யானை இவைகளையே வச்சு எடுக்கறது.

டைரக்டர்: சரி அதுவும் கொஞ்ஜம் வித்தியாசமாதான் இருக்கு, மேலே போங்க.

க.கபிலன்:ஒரு நாள் மந்திரிய தொடர்ந்து போய், ஹீரோ அவங்க கோட்வுன்ல மாட்டிகிறார். அவர சங்கிலில கட்டி போட்டு, " நீ உங்க அம்மா மகன் தானே, சொல்லுன்னு மிரட்டறாங்க. ஆனா ஹீரோவோ " நீங்க எவ்வளவு அடிச்சாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" ங்கறான். ஏன்னு கேட்டா "எனக்கு கேள்வியே புரியல்லயே" ங்கறான்.சரி இவன் உண்மைய ஒத்துக்கமாட்டான்னு சொல்லி மந்திரி அவனை சுட தயாராகறார்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, சஸ்பென்ஸ் தாங்கல்லையா, சீக்கிரம் சொல்லு,

க.கபிலன்: சார் கதை கேக்குற உங்களுக்கே இப்பிடி இருந்தா, மியூசிக்கோட இந்த ஸீன் படத்துல எப்படி இருக்கும் கொஞ்ஜம் யோஜிச்சு பாருங்க சார்.

டைரக்டர்: யோவ் அவரு அப்புறம் யோசிப்பார்.you proceed.

க.கபிலன்: அப்ப குருவி பறந்து வந்து துப்பாக்கிய தட்டி விடுது. தவளை தாவி போய் சங்கிலிய அவுத்து விட்டு ஹீரோவ விடுவிக்கிது. அப்போ மந்திரி ஒரு திடுக்கிடும் தகவல சொல்றாரு.ஹீரோவோட அம்மா அவர் அக்கா என்றும், சொத்துக்காகதான் இப்படி செஞ்ஜேன்னு சொல்லறார். அதுனால ஹீரோவும் ஹீரோயினும் மாமா பொண்ணு அத்தை பையன் ஆயிடறாங்க. ஹீரோ எல்லாரையும் அரஸ்ட் பண்ணறார்.

தயாரிப்பாளர்: என்னாய்யா இது, அவர் எப்புடியா அரெஸ்ட் பண்ணுவார்?

க.கபிலன்: அங்க ஒரு twist.அப்பத்தான் அவர் சொல்லறார். நா I.A.S மாதிரி நடிச்சேன். உன்மையிலேயே நா I.P.S.

தயாரிப்பாளர்: சரி ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் இன்னும் கிடையாதா??

க.கபிலன்: அது இல்லாம எப்பிடி சார் தமிழ் படம். " நா பொருக்கறது பேப்பர், ஆனா என் வாழ்க்கை என்றும் சூப்பர்".

டைரக்டர்: சரிய்யா, கதையெல்லாம் சொன்ன, டைடிலயும் நீயே சொல்லு

க.கபிலன்: 3 டைட்டில் வெச்சுருக்கேன் சார். ஒரு பேப்பர் நோட்டாகிறது, காகித மேகம், எவன்டா மந்திரி?

தயாரிப்பாளரும் டைரக்டரும்: அப்பா கதையரசர் கபிலா, இப்பவே கண்ண கட்டுது நீ அடுத்தவாரம் வந்து பாரு.

க.கபிலன்: சார் அடுத்தவாரம் இன்னும் ரெண்டு கதையோட வரேன் சார், வர்ட்டா!!!!!!!!!

Labels: , , ,

Monday, January 28, 2008

ஸ்டோரி டிஸ்கஷன்

தயாரிப்பாளர் துரைசிங்கம் தன் திரைப்பட நண்பர்களுடன் சோகமாக பேசிகொண்டிருந்தார்.

" என்னாய்யா இது, நம்ம நெலம இப்புடி ஆயிடுச்சு!!! வன்முறையும் ஆபாசமும் சினிமாவில் இருக்கக்கூடாதுன்னு இப்புடி போராட்டம் நடத்தறாங்க.மொத்தம் 15 ரீலிலே இது ரெண்டையும் எடுத்துட்டா 14 ரீல் போயிடுமே.பாக்கி ஒரு ரீல வச்சு பயாஸ்கோப்புதான் ஓட்டணும்"

அந்த சமயத்தில் ஒருவர் உள்ளே வருகிறார். " சார், என் பெயர் கதையரசர் கபிலன்.
எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா, வெள்ளி விழா கொண்டாடற மாதிரி ஒரு கதை பண்ணி தரேன் சார்"

டைரக்டர்: அதென்ன கதையரசர் கபிலன். உங்க அம்மா அப்பா வச்ச பேரா?

க.கபிலன்: இல்ல சார். கபிலன் அவங்க வச்ச பேர். பட்டம் நானா சேத்துகிட்டேன்.
சார் கதை சொல்லட்டுங்களா?

தயாரிப்பாளர்: கதை யாருக்குயா வேணும்? இவ்வளவு நாளா கதையை வச்சா படம் எடுத்தோம்.

க.கபிலன்: சார் கதைன்ன நிஜமா கதை கிடையாது, கதை மாதிரி.

டைரக்டர்(தயாரிப்பளரிடம்) சார், நம்பளுக்கோ இப்ப வேலை எதுவும் இல்லை. சும்மா கேட்டுதான் பாப்போமே.

தயாரிப்பாளர்: சரி சொல்லுய்யா, என்ன கிராமத்து கதையா?

க.கபிலன்: இல்ல சார், கிராமத்து கதைன்னா அதுல கெட்ட வார்த்தையெல்லாம் வரும் அப்புறம் சென்சார் பிராப்ளம். நம்ப கதை நகரத்துல நடக்கறா மாதிரி வச்சுப்போம்

டைரக்டர்: சரிய்யா அப்படியே வச்சுக்க, கதைய சொல்லு.

க.கபிலன்: நம்ம ஹீரோ படிக்காதவன். ஏழை. தெருத்தெருவா பேப்பர் பொருக்கறதுதான் அவன் வேலை.

டைரக்டர்: ஆஹா இந்த மாதிரி காரக்டர் இது வரைக்கும் எந்த படத்திலும் வந்ததில்லை, புதுமையா இருக்கு மேலே சொல்லு.

க.கபிலன்: ஹீரோயின் ஒரு கலெக்டர். ஒரு நாள் அவங்க ஆபீஸ் வாசல்ல ஹீரோ பேப்பர் பொருக்கிகிட்டிருக்கும் போது, கலெக்டர் கிட்ட ஒரு மந்திரி ஒரு பைல்ல கையெழுத்து போட சொல்லி மிரட்டறார். இருவருக்கும் தகராறு வர அந்த சத்தத்தை கேட்டு ஹீரோ அந்த ஆபீஸ் இருக்கும் நாலாவது மாடிக்கு ஜம்ப் பண்ணறான். இதுதான் ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் முதல் காட்சி. அந்த இடத்துல நம்ம அவர்களுடைய கண், காது, மூக்கு, கால் நகம் இவற்றை மாத்தி மாத்தி காட்டறோம். அப்ப ஹீரோ பொருக்கின குப்பையும், கலெக்டர் ஆபீஸ் குப்பையும் ஒண்ணா கலக்குது.

டைரக்டர்: இங்க ஒரு பாட்டு வச்சுக்கலாம். backgroundல கலர் கலரா பேப்பர் பறக்க விடலாம்.

தயாரிப்பாளர்: ஆனா குப்பை பொருக்கறவனும் கலெக்டரும் எப்பிடியா சேருவாங்க? லாஜிக்கா இல்லையே?

க.கபிலன்:அதுக்கு ஒரு ஐடியா வச்சுருக்கேன். நம்ம ஹீரோ சொல்றான்"ஊர்ல ஒரு குப்பை இருக்க கூடாது, அதுதான் என் லட்சியம், அப்பறம்தான் நம்ம கல்யாணம்னு". அதுக்கு ஹீரோயினும் "இந்த மந்திரி தொல்லை தாங்கல்லை, அதுனால நானும் வேலைய ராஜினாமா பண்ணிட்டு உங்க லட்சியத்தை நிறைவேத்துவேன்னு சபதம் போடறா.இந்த இடத்துல அவங்க ஆபீஸ்ல கடிகாரம் மணி அடிக்குது, சாமி படத்துலேந்து ஒரு பூ விழுது. ஒரு பொம்மை தலை ஆட்டுது.ஒரு காலண்டர் காத்துல திரும்பிக்குது.

டைரக்டர்:ஆஹா சூப்பர், அப்புறம்!

க.கபிலன்: ஹீரோயின் ஹீரோவுக்கு அவன் பொருக்கும் பேப்பரில் இருந்தே உலக அறிவும்,படிப்பறிவும் சொல்லி தராங்க.இப்பிடியே படிச்சு ஒரு வருஷத்துல ஹீரோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ணிடறார்.

தயாரிப்பாளர்: யோவ், இது உனக்கே கொஞ்ஜம் ஓவரா தெரியல்லை, சரி மேலே சொல்லு.

க.கபிலன்: ஒரு நாள் ஹீரோ ஹீரோயின் வீட்டுக்கு போறார். அங்கே ஹீரோயின் ஒரு பாட்டை கேட்க அவருக்கு அதிர்ச்சி.அந்த பாட்ட எங்கயோ கேட்ட ஞாபகம்.அப்பறம்தான் அவருக்கு ஞாபகம் வருது அது அவர் தாயின் கருவில் உருவானபோது, அவர் அம்மா பாடிய பாட்டு.அதனால் தன் தாயின் மரணத்திற்கும் ஹீரோயின் அப்பாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்படுகிறான். இந்த உண்மை தெரிந்த பிறகே நம் திருமணம் என கூறி வெளியேருகிறான்.

தயாரிப்பாளர்: ஆஹா அம்மா சென்டிமெண்ட் அருமைய்யா, பின்னிட்ட போ!

க.கபிலன்: இங்கே இடைவேளை வச்சுக்கலாம் சார்.

தயாரிப்பாளர்: சரிய்யா, இன்னிக்கு இது போதும், மீதிய நாளைக்கு வந்து சொல்லு.

Labels: , , ,

Friday, November 16, 2007

பெண் பார்க்கும் படலம் - Part 2

ஒரு வழியாக வத்ஸு பாடி முடித்தாள்.
சுந்தரம்: அருமையா பாடறாளே
ஜானகிராமன்: இவ மட்டும் முழு மூச்சா பாடினா
விச்சு: (மனசுக்குள்) கேக்கறவாளுக்கு மூச்சு வாங்குமோ?
ஜானகிராமன்: மேடைக்கச்சேரியே பண்ணிருப்பா.
விச்சு(மீண்டும் மனசுக்குள்) நல்ல வேளை ரசிகர்கள் இந்த இ(ம்)சை கச்சேரிலேந்து தப்பிச்சா. சும்மா சொல்லக்கூடாது ஆண்டவன் என்னமா காப்பாத்தறாரு
அப்பொழுது உள்ளிருந்து கற்பகம்: ஏன்னா, கொஞ்ஜம் இங்க வரேளா
ஜானகிராமன் உள்ளே போகிறார் வத்ஸுவும் பின்னால் போகிறாள்.
அதற்க்குள் சுந்தரம் விச்சுவிடம்: என்னடா பொண்ணு புடிச்சுருக்கா?
விச்சு: நீங்க என்னப்பா சொல்றேள்?
சுந்தரம்: எனக்கு ஓ கே டா, நல்ல குடும்பம், ஒரே பொண்ணு, என்ன, அவ உசரத்துக்கு மேல போய் 5 கட்டைல பாடறா
விச்சுவால் நம்ப முடியவில்லை. இதுவரையில் ஒரு முறை கூட சுந்தரம் இப்படி ஆன் தி ஸ்பாட் டிசிஷன் எடுத்ததில்லை. நீ என்ன சொல்லறே
விச்சு: நா பொண்ணோட கொஞ்ஜம் பேசனம்பா
அதை கேட்டு கொண்டே வந்த ஜானகிராமன் அதற்க்கேன்ன தாராளமாய் பேசலாமே, அம்மா வத்ஸு இங்க கொஞ்ஜம் வாம்மா மாப்பிள்ளை உன்னோட பேசனமாம்.
விச்சு: என்னா சார் நீங்க அதுக்குள்ளெ என்னை போய் மாப்பிள்ளைன்னு
ஜானகிராமன்: நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல்லை. எங்காத்துல எல்லாருக்கும் ஒ கே. வத்ஸு உள்பட.
வத்ஸுவும் விச்சுவும் ஒரு தனி அறைக்குள் போகிறார்கள். அங்கே....... மீண்டும் தொடரும்

Labels: , ,

Monday, November 05, 2007

பெண் பார்க்கும் படலம் - Part 1

இதுவரை 26 பெண் பார்த்தும் விச்சுவிற்கு இன்னும் விடிவு காலம் இல்லை. அம்மா இல்லாததால் அவன் அப்பா சுந்தரம் ரொம்பத்தான் படுத்தி எடுத்தார்.பெண்ணை அவனுக்கு பிடித்தால் அவன் அப்பாவுக்கு பிடிக்காது. இரண்டு பேருக்கும் பிடித்தால் பெண் வீட்டாருக்கு இவனை பிடிக்காது. இன்று 27வது பெண்ணை பார்க்க ஆபிஸில் மேனேஜரிடம் பர்மிஷன் கேட்க போனான்.

விச்சு : சார், எனக்கு இன்னிக்கு 2 hrs பர்மிஷன் வேணும் சார்.

மேனேஜர் : என்னப்பா, பொண்ணு பாக்க போறியா?

விச்சு : சார் நீங்க ஜீனியஸ் சார், எப்பிடி சார் கண்டு பிடிச்சீங்க?

மேனேஜர் : யோவ், நீதான் மாசத்துக்கு 2/3 தடவ பொண்ணு பாக்க பர்மிஷன் கேக்கறயே. சரி சரி இந்த தடவையாவது பொண்ணு கிட்ட தனியா பேசறேன்னு ஏதாவது தறுமாறா கேள்வி கேட்டு வைக்காதே, போய்ட்டு வா

விச்சு : ஒகே சார், தாங்க்ஸ் சார்.

மாலை மனி 5.30

விச்சுவின் அப்பா சுந்தரம் பட்டு வேஷ்டி ஜிப்பா என தடபுடலாக இருந்தார்.

விச்சு : அப்பா, ஒரு சின்ன சந்தேகம் பொண்ணு பாக்கறது உனக்கா இல்லை எனக்கா?

சுந்தரம் : இல்லடா, ஒரு பந்தா!!!!!!!!

விச்சு : போதும் போதும் ஒரு பந்தாவும் வேண்டாம், இப்பதான் புரியுது, ஏன் நிறைய பெண்கள் மாப்பிளையை பிடிக்கலைன்னு சொன்ன்னான்னு. நீங்க பண்ணிக்கற டிரஸ்ஸையும் போட்டுகற perfumaiயும் பாத்து நீங்கதான் மாப்பிள்ளைன்னு நெனச்சாளோ என்னவோ?

சுந்தரம் : சரி சரி ரொம்ப ஜோக் அடிக்கறதா நெனைக்காம கிளம்பு, டைம் ஆச்சு, அவாத்துக்கு எடுத்துண்டு போற சாமான் எல்லாம் ரெடியா?

விச்சு : அதெல்லாம் எடுத்துண்டு என் பிரெண்ட் சூரி நேரா அவாத்துக்கு வந்துடுவான்பா

மணி 6.15

பொண்ணோட அப்பா ஜானகிராமன் ; ஏண்டி கப்பு(அவர் வொய்ப் கற்பகம்) எல்லாம் ரெடியா இப்ப அவா வந்துடுவா, வத்ஸு(அதாங்க வத்ஸலா, அவர் பொண்ணு) நீ ரெடியாடிம்மா அவா கேள்வி கேட்டா இல்ல பாட சொன்னா தைரியமா பதில் சொல்லு,பாடு புரிஞ்ஜுதா

மணி 6.45
எல்லோரும் ஜானகிராமன் வீட்டுக்குள் நுழையாமல் வாசலில் நிற்கின்றார்கள்.

ஜானகிராமன் : வாங்கோ, வாங்கோ ஏன் வாசல்லயே நின்னுட்டேள்???

சுந்தரம் ; இல்ல இதுதான் வாசலான்னு ஒரு சந்தேகம்

ஜானகிராமன் ; அது ஒண்ணும் இல்ல, அந்த காலத்து வீடு,என் பொண்ணு வத்ஸு கொழந்தையா இருந்தப்ப வாங்கினது அதான் வாசல்கதவு கொஞ்ஜம் சின்னதா இருக்கு ஹி ஹி

சுந்தரம் : யோவ் கம்பியே இல்லாத ஒரு ஜன்னல வச்சுட்டு கதவுங்கறயே இது ஒமக்கே நல்லா இருக்கா

அதற்குள் விச்சு : அப்பா கொஞ்ஜம் சும்மா இருக்கேளா, சாரி சார் எங்க அப்பா இப்படித்தான் வெளிப்படையா பேசுவா

எல்லோரும் உட்கார்ந்தவுடன் , ஜானகிராமன்: முதல்ல டிபன் சாப்படறேளா இல்லா பொண்ண வரசொல்லட்டமா?
சுந்தரம்: பொண்ணயே டிபன கொண்டு வர சொல்லுங்கோ டூ இன் ஒன்
ஜானகிராமன் : சரி, அம்மா வத்ஸு டிபன எடுத்துண்டு நீயே வாம்மா

எல்லோரும் அந்த காலத்து வெள்ளிகிழமை ஒலியும் ஒளியும் பார்க்க வைய்ட் பண்ணுவது போல ஆர்வமாக இருந்தார்கள். சுமார் 3 நிமிடம் கழித்து 4 அடி உயரத்தில் 5 தட்டுகளுடன் வத்ஸு அனாயாசமாக வந்தாள். சுமாரான உயரம் உள்ள விச்சுவே ஒரு கணம் ஆஆஆடி போனன்.

விச்சு( மனதிற்க்குள்) கத்திரிக்காய் சைஸ்ல இருக்காளே, பேசாம கொத்ஸுன்னு பேர் வச்சுருக்கலாம்

ஜானகிராமன் : இதான் என் ஒரே பொண்ணு வத்ஸலா. நாங்க வத்ஸுன்னு கூப்பிடுவோம்,
அம்மா எல்லாருக்கும் டிபன் குடும்மா

சுந்தரம் : பொண்ணு நன்னா பாடுவான்னு சொன்னா ஒரு பாட்டு பாட சொல்லுங்கோளேன்

ஜானகிராமன் : ஓ பேஷா, வத்ஸு ஒன்னோட favorate பாட்டை பாடும்மா

வத்ஸு பாடுகிறாள் : குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ..........

விச்சு : அடிப்பாவி, என்னமா பொய் சொல்லறா பாதிக்கு மேல வளரவே இல்ல ,அதுவே பெரிய குறை, மனசுல பெரிய M.S இன்னு நெனெப்பு

ஒருவழியாக வத்ஸு பாடி முடிக்கிறாள்.
மேலும் தொடரும்.............

Labels: ,

Monday, September 24, 2007

MARRIAGE INVITATION

CRAZY MARRIAGE INVITIATION


Mrs and Mr.SAMBHAR CHATNI request the pleasure of your company
on the occassion of the marriage of their grandson,
SADA DOSAI(Youngest son of Mrs & Mr.MASAL DOSAI)
TO
PANI POORI(Daughter of Mrs & Mr.BHEL POORI) ON 31ST September 2222 at 2.00am at
Dahi Wada Hall, Samosa Building, Cham Cham Road, Opposite to Masala Papad Theatre,
Haldiram Nagar, Rasagullo(formerly Kolkothaa) - 300001

Contact address: "adai aviyal", Pongal Vadai Road,
Chole Bhattura Avenue,
Thayir Sadam(formerly Chennai)- 600001
E-Mail: Loosemotions@Toilets.com
Blog: Imodium.stomachache.blogspot.com

PS: NO GIFTS OR PRESENTS IN CASH OR KIND. WE ACCEPT only DEBIT AND CREDIT CARDS WITH PIN NUMBERS

WITH BEST COMPLIMENTS FROM:

Mrs & Mr.Idly Mulagapodi
Mrs & Mr.Poori Kizhangu
Mrs & Mr.Vadaam Varuval and also
Mr.Cone Ice &
Master. Kuchi Ice

Labels: , , ,