market passion

Thursday, February 21, 2008

மூக்கின் மகிமை

எல்லோரும் ஜலதோஷம் பிடித்தால் முன்று அல்லது நான்கு நாட்கள் கஷ்ட்டபடுவார்கள். எனக்கு அந்த நாட்கள்தான் விடுமுறை. அப்பொழுது என் மனைவி செய்யும் சிசுருஷயை நீங்கள் பார்க்க வேண்டும். என் மூக்கு சரியாவதில்தான் அவளுக்கு எத்தனை அக்கறை. பின்ன என்னங்க, மோப்ப நாயால் அதுக்கு என்ன பிரயோஜனம்? அதை வளர்ப்பவர்களுக்கு தானே அதன் பயன் தெரியும்.ஹி ஹி இது ஒரு உதாரணம்தான், நீங்க கற்பனைய கன்னா பின்னான்னு அலைய விடக்கூடாது.

என் மூக்கு செய்யும் வேலை ஒன்றா ரெண்டா? சமையலுக்கு தேங்காய் உடைத்தவுடன் அது அழுகலா என்று சந்தேகம் வந்தால் அது ஆரம்ப நிலையா இல்லை ரொம்ப மோசமான்னு மோப்பம் பிடிச்சு சொல்லணும். அழுகல் தேங்காயை கண்டுபிடிப்பதில் நான் அத்தாரிட்டி என்பது அவள் அபிப்பிராயம்.

சரி அத விடுங்க. என் பையன் ஐந்து வயது வரை ராத்திரி படுக்கையிலே மூச்சா போவான். சில நாள் சீக்கிரமாகவே போய்விட்டால் காலையில் காய்ந்து விடும். அப்பொழுது எந்த எந்த துணிகளை தோய்க்க போடுவது, எந்த எந்த துணிகளை வெய்யிலில் காய போடுவது என்பதை நிர்ணயிப்பது என் மூக்குதான்.

அப்பறம் இந்த வெண்ணெய் காய்ச்சற அன்னிக்கி ரொம்ப கூரா மூக்கை தீட்டிக்கணும். அப்போது ஒருவிதமான வாசனை(நாற்றம்) வரும் பாருங்க. சரியா காய்ச்சல்லைன்னா நெய் மொழுக்குன்னு இருக்கும். மணல் மணலா காய்ச்சறேன்னு கொஞ்சம் விட்டா தீஞ்ச வாசனை வரும். அப்படி வந்துடுத்துன்னா நெய் நம் தட்டில் விழும் போது நமக்கு கொஞ்சம் திட்டும் விழும்.

சரி இந்த ஊதுவத்தி வாங்கற விஷயத்துக்கு வருவோம். சாம்ப்ராணி வாசனை அட்டையில் மட்டும் வருகிறதா அல்லது உள்ளிருந்து வருகிறதா என மாசல்வடையை கண்டிபிடிக்கும் எலி போல நான் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் ஏற்றியவுடன் கூட சரியாக தெரியாமல் அந்த நெருப்பு பொறி மூக்கில் பொட்டு வைக்கும் அளவுக்கு போவதும் உண்டு. அப்பொழுதும் வாசனையில்லாமல் நீ அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட எமாந்த்துட்டன்னு சொன்னாலும் கோபபடாம உங்கள் மூக்கின் முடிவே இறுதி முடிவு என்று ஒப்புக்கொள்ளும் நல்ல மனசு அவளுக்கு.

அப்பறம் மாசத்துல ஒரு நாள் ப்ரிஜ்ச க்ளீன் பண்ணும் போது பாக்கணும். பல தேதிகளில் செய்த பலவித ஐட்டங்கள் பலவிதமான சைஸ் பாத்திரங்களில் அடைபட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு ஐட்டம் ரொம்ப மோசமாக ஆகி இருந்தால் அந்த கருப்பு ஆட்டை(black sheep) கண்டுபிடித்து சொல்வதற்கும் என் மூக்கு பயன்படுத்தப்படும்.

இப்படி பல காரியங்களுக்கும் ஏன் ஆண்களின் மூக்கை பயன்படுத்துகின்றார்கள். அப்ப அவங்களுக்கு எட்டு கல்லோ இல்ல வைர கல்லோ பதித்த நகை அணிய மட்டும்தான் மூக்கா?

யாராச்சும் பதில் தெரிஞ்ச்ஜா சொல்லுங்கப்பா!!!!!!

Labels: ,

2 Comments:

Post a Comment

<< Home