market passion

Friday, August 03, 2007

இதோ வந்துட்டேன்

ஓரு மாத லீவு போனதே தெரியல்லை. பல முக்கிய வேலைகள் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவது, சவுதியின் ஒரு வருட விரதத்தை சரிபடுத்த கிளப் கிளப்பாக செல்வது என்று நேரமே போதவில்லை போங்கள். இதற்கெல்லாம் நடுவில் ஒரு பூணல் கல்யாணம், ஒரு பிறந்த நாள் பார்ட்டி வேறு. அதில் ஒரு சௌகரியம் நிறைய உறவினர்களை ஒரே இடத்தில் பார்த்து வேலையை முடிக்கலாம். நேரம் மிச்சம்.
3 நாட்கள் ஆன்மீக பயணம்.அண்ணா - மன்னி,அக்கா,மாமாவுடன் நானும் மனைவியும் டொயோடா இன்னோவா(toyota Innova) வேனில்.வெள்ளிக்கிழமை காலை மணி 7 எல்லோரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். எப்பொழுதும் போல திண்டிவனம் தாண்டி கணேஷ் பவனில் இட்லி,வடை,பொங்கலுடன் காபி.சரி,சரி முதலில் பார்த்த கோயில்களை எழுதி விடுகிறேன்.
சமயபுரம் - லால்குடி - திருவரங்கம் - திருச்சி - தஞ்ஜாவூர் - திருச்சேரை - உப்பிலியப்பன் கோவில் - நாச்சியார் கோவில் - திரு நாகேஸ்வரம் - வைதீஸ்வரன் கோவில்(குல தெய்வம்) - சீர்காழி எல்லாம் பார்த்து விட்டு கடைசியாக சிதம்பரம் நடராஜர் கோவில்.அண்ணாவின் நண்பன் மூலமாக அருமையான தரிசனம்
அதைவிட அருமையான சாப்பாடு - சிதம்பரம் ஸ்பெஷல் - சம்பா சாதம் - கொஸ்து (இல்லை) கொத்ஸு - சே - இந்த தடவையும் ஸொதப்பிட்டேனா - அப்புறம் - அந்த (ஸ் ஸ் ஸ் - ஆகா நாக்கு ஊறுதுங்கோ) கல்கண்டு சக்கரைபொங்கல் இதெல்லாம் சாப்பிட்டது போக மீதிய கும்பகோணத்தில வாங்கின தூக்கில போட்டு அது வெய்யில்ல செத்து போறத்துக்குள்ள ரெண்டாவது ரவுண்டும்( ஓ ஓ இதுதான் ரவுண்டு கட்டி அடிக்கறதா)சாப்பிட்டோம்.பிறந்த மண்ணை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அத நெத்தில இட்டுன்டு போகாம, அதுலயே விழுந்து புரண்டு (நல்லவேலை சட்டையோட புரண்டேன் இல்லேன்னா வெய்யிலும் கல்லும் சேர்ந்து பொத்தல் போட்டுருக்கும்.) எழுந்து பார்த்தா எதிர்க்க நிக்கறார் ஸ்கூல் கணக்கு வாத்தியார் ஷேஷாத்திரி.அந்த நிலைலயும் என்ன பார்த்து கரெக்டா அடையாளம் கண்டுபுடிச்சு(மறக்க கூடிய மாதிரியா இருந்துருக்கோம்) ஏண்டா தெருப்புழுதி(அப்புடித்தான் செல்லமா கூப்பிடுவார்) எப்பிடி இருக்கேன்னு ஆசையா விசாரிச்சார்.அப்புறம் அண்ணாமலை பல்கலைகழகம் போய் அண்ணா,அக்கா நான் மூவரும் அவரவர்கள் படித்த Department முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டோம். யாரது தில்லுமுல்லு தேங்காய் மாதிரி "அதுல என்ன பெருமைன்னு குரல் விடரது"? இப்படியாக இனிதே முடிந்தது 3 நாள் பயணம். மற்றவை அடுத்த போஸ்ட்டில்.

Labels: ,

4 Comments:

  • At 4:51 AM, Blogger Geetha Sambasivam said…

    வாங்க மணிப்பயல், வந்ததும் என்னை நினைவு வச்சுட்டு வந்து நலம் விசாரிச்சதுக்கு நன்றி. அதென்ன உங்களுக்குக் கல்கண்டு சக்கரைப் பொங்கலும், சம்பா சாதமும் எங்கே கிடைச்சது? தி.ரா.ச. வீட்டுக்குப் போகலையா? நானும் இத்தனை வருஷமாச் சிதம்பரம் போயிட்டு வந்து அது பத்தி எழுதக் கூட எழுதறேன். இன்னும் இந்த சாதம் ரென்டும் வேணும்னா நானே பண்ணிச் சாப்பிட்டால்தான் உண்டு. :P

     
  • At 5:12 AM, Blogger manipayal said…

    வாங்க கீதா மேடம், சக்கரைபொங்கலும் சம்பா சாதமும் கொஸ்தும் தீக்ஷதர் வீட்டிலேயே செய்தார்கள்.மேலும் அவர்களுக்கு எங்கள் அப்பாவை நன்றாக தெரியும் என்பதால் ஏக உபசரிப்பு. அடுத்த முறை உங்கள் தீக்ஷத்ரிடம் சொன்னால் செய்து கொடுப்பார்கள்.அந்த கொஸ்து 2/3 நாட்கள் ஆனாலும் கெடாது.அவ்வுளவு ஸ்பெஷல்.

     
  • At 10:47 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    இதெல்லாம் சரிதான். ஆனா நம்ப வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு வராமப்போயிட்டீங்க. அதுவும் அர்ஷ வித்யாஸ்ரமம் வரை வந்துவிட்டு.செப்டெம்பரில் சௌதி வருகிறேன் கவனித்துக்கொள்கிறேன்

     
  • At 11:02 PM, Blogger manipayal said…

    மன்னிக்கனும் சார். நிஜமாகவே வரணும்னுதான் இருந்தேன். முடியவில்லை.அடுத்த முறை கட்டாயம் வருகிறேன்.அம்பிக்கு மட்டும் தான் மொட்டை மாடியில் சாப்பாடா? நாங்களும் நல்லா சாப்பிடுவோமில்ல. அர்ஷ வித்யா மந்திர் தினமும் வரது என் வொய்ப்தான். செப்டம்பரில் சௌதிக்கா? எந்த ஊர்? எவ்வுளவு நாள்? தம்மாம் என்றால் எனக்கு மிக அருகில்.என்னுடனேயே கூட தங்கலாம். என் சௌதி போன் 055 6016906. தயவு செய்து கூப்பிடவும்.

     

Post a Comment

<< Home