market passion

Wednesday, October 03, 2007

ramar bridge - a discussion by rama and aanjaneeya

ராமர் பாலம் பற்றி ராமரும் அனுமாரும் ஒரு கலந்துரையாடல்

ராமர்: என் அன்பிற்குரிய அனுமாரே, எவ்வளவு அருமையாக உன் வானர சேனையுடன் இந்த பாலத்தை கட்டி இருக்கின்றீர்கள். பல்லாயிரம் ஆண்டு ஆன போதிலும்,பல விதமான இயற்கை சோதனைகளுக்கு ஆளாகியும் இன்றும் இந்த பாலம் உறுதியாக உள்ளதே. ஆனால் இப்பொழுதோ Gammon India ஹைதிராபாதில் கட்டும் போழுதே பாலம் இடிந்து விடுகிறதே.

அனுமார்: ராமா, இது எல்லாம் உன் அருளால் நடந்தது. நாங்கள் TISCOவிடம் இருந்து இரும்பு கம்பிகளோ, ACCயிடம் இருந்து சிமிண்ட்டோ வாங்கவில்லை.எல்லா கற்களிலும் ராமா ராமா என்று எழுதி கடலில் போட்டோம் அவ்வுளவுதான். இப்பொழுது அதை பற்றி என்ன?

ராமர்:அந்த பாலத்தை இடிக்க போவதாக பூமியில் பேச்சு எழுந்துள்ளது நாம்
நேரில் போய் இதை எடுத்து சொன்னால் என்ன?

அனுமார்:ராமா, இப்போது பூமியில் நிறைய மாறி விட்டது. வாய் வார்த்தையை யாரும் நம்புவதில்லை.எல்லாவற்றிற்கும் சான்றிதழ் தேவை. நாம் அங்கு போனால், நமது பிறப்பு சான்றிதழ், நாம் உயிரோடு இருப்பதற்கு மருத்துவர் சான்றிதழ் எல்லாம் கேட்பார்கள். அந்த காலத்தில் நாமோ நடந்தோ இல்லை குதிரை மேலோ செல்வோம். ஆனால் இப்போழுதோ டிரைவிங் லைசென்ஸ் தேவை. நீங்கள் வாகனம் ஓட்டாவிட்டாலும் வாகனம் வாங்கினால் லைசென்ஸ் வாங்க வேண்டும்

ராமர்: ஆமாம் ஆமாம். நான் அயோத்தியில் பிறந்ததே இன்னும் சர்ச்சையில் உள்ளது. அதனால் நான் வீட்டு விலாச(address proof) சான்றிதழும் கொடுக்க முடியாது. அரண்மனையிலேயே எல்லா பாடங்களையும் வித்தைகளையும் பயின்றதால் பள்ளி சான்றிதழோ கல்லூரி சான்றிதழோ கொடுக்க முடியாது.ஆனால் நீதான் உன் வானர சேனையுடன் இந்த பாலத்தை கட்டினாய்.அதை கண்ணால் பார்த்த நான் சாட்சி. ஆனால் நான் இதே உருவத்தில் வந்தால் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டாலும், அர்ஜுன் சிங் ஒப்புகொள்வாரா என்பது சந்தேகம்தான்.

அனுமார்: கட்டாயமாக நீதிமன்றத்தில் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.மேலும் பாலம் கட்டியதை தாங்கள் பார்த்ததாக சொன்னால் இன்னும் பல கேள்விகளை தமிழ் நாடு அரசு கேட்கும். பாலம் கட்ட அரசு ஒப்புதல் உள்ளதா? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது? ஒதுக்கபட வேண்டியவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதா? என்ற பல கேள்விகளை தங்கள் எதிர் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வழக்கிற்கு சம்பந்த பட்டவராதனால், உங்கள் சாட்சியம் எற்றுகொள்ள படாது.இந்த பூமியில் எவ்வளவோ பேருக்கு நீங்கள் தரிசனம் தந்து அருளியுள்ளீர்கள். சுர்தாஸ், துளசிதாஸ், தியாகராஜர், ஜெயதேவர் மற்றும் துக்காரம் போன்றவர்களுக்கு தெரிந்துள்ளீர்கள். இவர்கள் எல்லாம் இருப்பதாக சரித்திர சான்றுகளும் உள்ளன. ஆனால் நீங்கள் இருந்ததை மட்டும் ஒப்பு கொள்ள மறுக்கின்றார்கள்.
மீண்டும் ஒரு முறை ராமாயணத்தை பூமியில் நடத்தி காட்டினால்தான் நம்புவார்கள்,ராமா.

ராமர்: அனுமனே, அது அவ்வளவு சுலபம் அல்ல. ராவணன் இதற்கு ஒப்புகொள்வானா தெரியாது. அவன் கருணாநிதியை பார்க்க பயப்படுகிறான்.அவன் மாமன் மாரீசனோ பூமியில் "சல்மான் கான்" இருக்கும் வரை அந்த பக்கமே ஒதுங்க மாட்டேன் என பிடிவாதம் செய்கிறான்.அது சரி, எல்லா கற்களிலும் "ராமா, ராமா" என்று எழுதியதாக சொன்னாயே, நீ எங்கே படித்தாய்? அதற்கு ஏதாவது சாட்சியம் உள்ளதா?

அனுமார்: ராமா, ராமா என்ன விட்டுடுங்கோ!!!

Labels:

5 Comments:

  • At 9:57 AM, Blogger manipayal said…

    காமெடியாக எழுதினாலும் I am serious about the subject. தயவு செய்து உங்களால் முடிந்த முயற்சி எடுங்கள். ராமர் பாலத்தை காப்பாற்றுங்கள். ராமர் பாலத்தை உடைப்பது ஒட்டு மொத்தமாக இந்துக்களின் தெய்வ நம்பிக்கையை உடைப்பதாகும். God is there and he is Great.

     
  • At 10:36 PM, Blogger நாகை சிவா said…

    :)))

     
  • At 5:59 AM, Blogger manipayal said…

    இந்த கமெண்ட்டுக்கு என்ன அர்த்தம் சிவா? சிரிப்பா,திகைப்பா இல்லை மறுப்பா?

     
  • At 7:30 AM, Blogger Geetha Sambasivam said…

    இது யாஹூ "பொன்னியின் செல்வன்" குழுமத்தில் பரிமாறிக் கொள்ளப் பட்டதாய் ஆங்கிலத்தில் எனக்கும் மெயில் வந்தது. உண்மையிலேயே படிக்கும்போது சிரிப்பாய் இருந்தாலும் மனதில் வருத்தம் வந்ததைத் தவிர்க்க முடியலை. :( என்ன ரொம்ப நாளா ஆளே காணோம்னு பார்த்தால் ஸ்டாக்கில் மூழ்கி முத்தெடுத்துட்டு இருக்கீங்க. இப்போ "ஹ" வருதா? சிரிக்க வருதா? :))))

     
  • At 11:19 PM, Blogger manipayal said…

    ஆமாம் நிஜமாகவே ரொம்ப பிஸி. ஏராளமான முத்துக்கள். எடுக்க எடுக்க இன்பம்(பணம்) முத்து குளிக்க வாரீகளா? ஹி ஹி ஹி

     

Post a Comment

<< Home