market passion

Thursday, September 27, 2007

HAPPY HOLIDAY

சவுதிக்கு நான் வந்த 15 மாதத்தில் முதல் முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை லீவு. 23rd Sept - Saudi National Day.இந்தியா, சவுதி இரண்டு ஸ்டாக் மார்கெட்டும் இல்லாததால் பூரண விடுமுறை.

காலையில் மோர்குழம்பு(இருக்கவே இருக்கு Litho's ReadyMix) உருளை கறி சமைத்துவிட்டு விசாகா Hariன்(தமிழில் இன்னும் "HA" தெரியவில்லை தலைவீ - Help pl?)சுந்தர காண்டம் DVDல் பார்த்தேன். அருமையான சொற்பொழிவு.அருமையான பாட்டு. 18 அல்லது 27 நாள் பாராயணம் பண்ணாமல் 125 நிமிடங்களில் அந்த பயனை அடைந்தேன். அதுவும் அசோகவனத்தில் ராவணன் சீதையிடம் கடுமையாக பேசி இன்னும் 2 மாதம் தருகிறேன், அதற்குள் உன் மனதை மாற்றிக்கொள், ராமர் எனக்கு எந்த விதத்திலும் இணையானவர் அல்ல என்று கூறுகிரான். அப்பொழுது சீதை ஒரு புல்லை அவர்கள் இருவரிடையில் போட்டு சில விஷயங்கள் சொல்லுகிறாள். அந்த இடத்தில் திருமதி விசாகா Hari என் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டார். ராமர் இருந்ததாக நம்புவோர்க்கு தானே அதன் அருமை தெரியும்.

மதியம் அருமையான் தூக்கம். பிறகு மாலை காட்சி - மருதமலை - ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் படம் - விமர்சனம் கீழே.

தந்தையின் ஆசைப்படி போலீஸ் வேலயில் சேர்ந்து ஒரு ஊருக்கு செல்கிறார் அர்ஜுன். 80% ஒரு ஜாதியினரும் 20% மற்றவரும் உள்ள இந்த தொகுதியை ரிஸர்வுட் தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்ததால், 16 வருஷமாக இங்கு தேர்தல் நடத்த விடாமல் ஒருவன் தடுக்கிறான். அவனுடைய அட்டகாசத்தை தேர்தல் அதிகாரியின் உதவியோடு ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார் அர்ஜுன். இதுதான் கதை. ரொம்ப சொதப்பாமல் நேராக கதையை சொல்லும் விதம் ஓகே. ஆனால் வழக்கம் போல எங்கே தவறு நடந்தாலும் அங்கு அர்ஜுன் வருவது கொஞ்ஜம் ஓவர். வடிவேலு காமெடி தாங்கலை. நல்ல வேளை அவருடைய சில அற்பத்தனமான வேலைகளை வசனத்திலேயே முடித்துவிட்டார்கள். காட்சியாக காண்பிக்காதது நாம் செய்த புண்ணியம். வில்லனின் 2 தம்பிகளையும் அர்ஜுன் தீர்த்துகட்டும் யுக்தி புதியது. பாராட்டலாம்.

மொத்தத்தில் மருதமலை -- மடு

Labels: , , ,

4 Comments:

  • At 2:21 AM, Blogger நாகை சிவா said…

    எனக்கு புரியல நீங்க ஏதை சொல்லுறீங்க என்று...

    ஹ என்ற எழுத்து வேணும் என்றால் இ-கலப்பைல ha என்று அடித்தால் வரும்.

    ஸ்ரீ - sr

     
  • At 11:09 PM, Blogger manipayal said…

    வாங்க புலி, இ-கலப்பை எனக்கு ஒத்து வரலை. நான் உபயோகிப்பது ஜாப்னா லைப்ரரி

     
  • At 1:09 AM, Blogger Geetha Sambasivam said…

    jaffna library yile ha, varanumna first - potutu appuram "h" poodavum! sirikkavum ithe than, ippadiyee sirikkalaam. tamil fonts sari illai. athanal thangilish.

     
  • At 1:16 AM, Blogger manipayal said…

    தமிழ் சங்கம் தீர்க்காத சந்தேகத்தை தனி ஒரு ஆளாக வந்து தீர்த்து வைத்த தலைவியே, நீவிர் வாழ்க நின் குலம் வாழ்க, ஹா,ஹா ஹா.

     

Post a Comment

<< Home