market passion

Saturday, September 15, 2007

அம்முவாகிய நான்

பார்த்திபனின் புதிய படம்.
பிறந்த உடனே தாயை இழந்து, தந்தையால் ஒரு விலைமகளிடம் விற்கப்பட்டு அந்த சூழ் நிலையிலேயே வளர்கிறாள் ஒரு பெண். வயது வந்ததும் தன் இஷ்டப்படி அவளும் அந்த தொழிலிலேயே ஈடுபடுகிறாள். ஓரு முறை எழுத்தாளர் பார்த்திபன் ஒரு நண்பருடன் அந்த இடத்துக்கு போகிறார். அம்மு என்ற அந்த பெண்ணை சந்திக்கிறார். அவளையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு திருமணதிற்க்கு சம்மதிக்கிறார் அம்மு.அதன் பிறகுதான் வாழ்க்கையின் அர்த்தத்தையும் ஒருவனுடன் வாழும் உன்னதத்தையும் உணர்கின்றார்.

எழுத்தாளர் பார்திபனின் புதிய நாவல் - அம்முவாகிய நான் - மூன்றாவது முறையாக சிறந்த நாவல் பரிசிற்க்கு பரிந்துரைக்க படுகிறது. அதை முடிவு செய்ய வேண்டிய அதிகாரி முன்னால் ஒரு முறை அம்முவால் அவமதிக்கபட்டவர். அதனால் இப்பொழுது கணவனின் பரிசுக்கு பதிலாக ஒரு நாள் மனைவியை விலையாக கேட்கிறார்.
ஆத்திரம் அடைந்த பார்த்திபன் அவரை அடித்து விட்டு வீடு திரும்பும் பொழுது தன் நண்பனை சந்தித்து நடந்ததை கூறுகிறான். நண்பணோ அம்முவின் முன்னாள் வாழ்க்கையை மேற்கோள் காட்டி இரன்டு முறை தவற விட்ட அந்த தேசிய விருதுக்காக அதற்க்கு ஒப்புக்கொள்ள சொல்கிறான்.

அவனிடமும் கோபம் கொண்டு குடித்து விட்டு வீட்டிற்க்கு வருகிறான். அப்பொழுதும் அவன் நண்பன் கைபேசியில் தொடர்ந்து கூப்பிட்டு சொல்ல அம்மு அதை கேட்கிறாள். தனக்கு வாழ்க்கை தந்த கணவனுக்காக தியாகம் செய்ய முடிவு செய்து அந்த அதிகாரி வீட்டிற்க்கு செல்கிறார். ஆனால் இவர் கை தன் மேலே பட்டவுடன் பொறுக்க முடியாது அவரை கொலை செய்து விடுகிறார். கணவன் மனைவி இருவருமே தான் கொலை செய்ததாக கோர்ட்டில் சொல்கிறார்கள். தீர்ப்பிற்க்காக கோர்ட் கலைகிறது. அதனிடையில் அந்த நாவலுக்கு பரிசு கிடைக்கிறது.

அருமையான கதை. எளிமையான திரைக்கதை.படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் - சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகள் எதுவும் இல்லாதது. ஆனாலும் 2,3 இடங்களில் டைரக்டர் வழுக்கி விட்டார்.

1.என்னதான் அவர் தாய் உபயோகித்தது ஆனாலும், அந்த கால Manual typewritier-ஐ பத்திரமாக பாதுகாக்க மட்டும் செய்யாமல் அதையே எழுத்தாளர் உபயோகிப்பது ஜீரணிக்க முடியவில்லை.

2." கட்டின பொண்டாடியயே இன்னொருத்தன் கிட்ட அனுப்பற இந்த காலத்திலே , நீங்கள் ஒரு விபசாரியை மணந்து கொண்டது பெரிய விஷயம்" - இது அபத்தமான வசனம்.

3.கோர்ட்டில் தீர்ப்பு வழங்காத நிலையில் குற்றவாளிகள் என கருதப்படும் இருவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதும், அதற்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் எப்படி?

அம்முவாகிய நான் - ஒரு முறை படிக்கலாம் (பார்க்கலாம்)

Labels: ,

7 Comments:

  • At 7:41 PM, Blogger Geetha Sambasivam said…

    ம்ம்ம்ம்., படம் வந்தது எனக்கும் காசில்லாமல் டவுன்லோடு செய்துக்கலாம்னு ஆனல் நான் பார்க்கலை. வேணாம்னு தான்.

     
  • At 7:43 PM, Blogger Geetha Sambasivam said…

    ரொம்ப பிசியா இருக்கீங்க போலிருக்குனு நினைச்சேன். நீங்களாவது நினைப்பு வச்சிருக்கீங்களே! :P மத்தவங்க படிக்கிறதாச் சொல்லறாங்க, கமென்டறதில்லையாம். திடீர்னு ஒரு நாள் எல்லாருக்கும் டெஸ்ட் வைக்கப் போறேன், என்னோட பதிவுகளில் இருந்து.

     
  • At 10:15 PM, Blogger நாகை சிவா said…

    உங்களை நம்பலாமா?
    :)

     
  • At 1:19 AM, Blogger manipayal said…

    வாழ்க்கையே நம்பிக்கை தான் நண்பா

     
  • At 1:25 AM, Blogger manipayal said…

    வாங்க கீதா மேடம், அப்படியெல்லாம் எதுவும் செஞ்ஜுடாதீங்க, யாரு தோத்தாலும் நஷ்டம் உங்களுக்குத்தான்

     
  • At 1:29 AM, Blogger manipayal said…

    என்ன மாதிரி இருங்க தலைவி, யாரு கமண்டெல்லைன்னாலும் கவலைபடுவதில்லை. போஸ்ட் போடுவது நம் பொழுது போக்கு. அதை ஜாலியாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வோமே

     
  • At 5:33 AM, Blogger Sudha said…

    Good review.
    KCS

     

Post a Comment

<< Home