market passion

Wednesday, September 12, 2007

தமிழ் சினிமா பாடல்கள்

சமீபத்தில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

1.புலிய கிளி ஜெயிச்சா காதல் காதல் - படம்: வீராப்பு இசை: D.இமாம் -

எளிமையான இசை - அழகிய வரிகள் - அதுவும் 2ஆவது சரணத்தில் வரும் வார்த்தைகள்

"உன்னை காணும் முன்னாலே அடி என்னை நானே வெறுத்திருந்தேன்,
உன்னை கண்ட பின்னாலே நான் புல்லையும் பூண்டையும் நேசிக்கிறேன்".

காதலில் சிக்கிய ஒரு முரட்டு ஆணின் யதார்த்தமான வார்த்தைகள்.



2.விழியில் உன் விழியில் - படம்: கிரீடம், இசை: ஜி.வி.ப்ரகாஷ்

வெய்யில் படத்தில் கலக்கிய இவர் ஏ.ஆர்.ஆரின் உறவினர். முதல் முறையாக இந்தி பாடகர் சோனு நிகம் ஒரு தமிழ் பாடல் பாடியிருக்கிறார். தமிழ் உச்சரிப்பு அருமை குரலும் இனிமை. என் அறிவுக்கு எட்டியவரையில் அருமையான அமீர்கல்யாணி ராகம். இந்த இளம் இசை அமைப்பாளரின் திறமை இந்த படத்தில் மேலும் உறுதியாகிறது. இவருடைய அடுத்த படம் நடிகர் ஆர்யாவின் "ஓரம் போ"

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home